திருநந்திக்கரை

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருநந்திக்கரை என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஒரு கிராமமாகும்.

விரைவான உண்மைகள் திருநந்திக்கரைThirunanthikarai, நாடு ...
Remove ads

அமைவிடம்

கன்னியாகுமரிமாவட்டம், திருவட்டார் வட்டம், திருநந்திக்கரை கிராமம், (பின் கோடு 629161) மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையில் அமைந்துள்ளது. மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையில் அமைந்துள்ள இவ்வூர் திற்பரப்பு சிறப்புக் கிராம பஞ்சாயத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வூர் குலசேகரம் தபால் அலுவலக வரம்பின் ஒரு பகுதியாகும். இதன் புவியியல் ஆள்கூறுகள் 8.3935°N 77.2994°E / 8.3935; 77.2994 ஆகும். இவ்வூர் கடல் மட்டத்திலிருந்து 125 மீ (410 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

Remove ads

போக்குவரத்து

இவ்வூர் குலசேகரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், பேச்சிப்பாறையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், திற்பரப்பிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், திருவட்டாரிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், மார்த்தாண்டத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், குளித்துறையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், தக்கலையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், பத்மநாபபுரத்திலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், இரணியலிலிருந்து 23 கி.மீ. தொலைவிலும், கொளச்சலிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 57 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருநந்திகரை மற்றும் அதன் அருகிலுள்ள நகரமான குலசேகரம் ஆகியவை திருவனந்தபுரம் அல்லது கோவளம் கடற்கரையில் இருந்து சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளன. கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (கே.டி.டி.சி) உள்ளூர் சுற்றுலாத் தலங்களைப் பார்ப்பதற்கான சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்து வருகிறது. அருகிலுள்ள இரயில் நிலையம் குழித்துறை மற்றும் இரணியல் ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இரு குலசேகரத்திலிருந்து பேச்சிப்பாறைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

Remove ads

தொழில்

இரப்பர் விவசாயம் தான் இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும். இங்குள்ள இளைஞர்கள் பலர் வளைகுடா நாடுகளில் வேலை செய்கின்றனர்.

மொழி, கலாச்சாரம்

20 சதவீதம் மக்கள் மலையாளத்தையும் 80 சதவீதம் மக்கள் தமிழையும் பேசுகின்றனர். இவர்களுடைய பாரம்பரியமும் கலாச்சாரமும் கேரள மக்களை ஒத்திருக்கிறது.

திருநந்திகரை கோவில்கள்

திருநந்திகரையில் இரண்டு முக்கியமான சிவன் கோயில்கள் உள்ளன:

  1. திருநந்திக்கரை நந்தீசுவரர் கோயில்[1]
  2. திருநந்திக்கரை குகைக் கோயில்.

நந்தீஸ்வரன் கோவில்

நந்தீஸ்வரன் கோவில் நந்தியாற்றங்கரையில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சைவ ஆலயங்களுள் திருநந்திக்கரை நந்தீஸ்வரன் கோவில் நான்காவது சிவாலயம் ஆகும். மகா சிவராத்திரியன்று பக்தர்கள் விரதம் இருந்து, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள

  1. திருமலை
  2. திக்குறிச்சி
  3. திற்பரப்பு
  4. திருநந்திக்கரை
  5. பொன்மனை
  6. பன்றிப்பாகம்
  7. கல்குளம்
  8. மேலாங்கோடு
  9. திருவிடைக்கோடு
  10. திருவிதாங்கோடு
  11. திருப்பன்றிக்கோடு
  12. திருநட்டாலம்

ஆகிய 12 சிவாலயங்களை அன்றைய ஒரே நாளில், ஓடி ஓடித் தரிசிப்பதே சிவாலய ஓட்டம் எனப்படும். இந்த சிவாலயத்தில் சிவனும் விஷ்ணுவும் இணைந்துள்ளனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads