திருநிலை பெரியாண்டவர் கோயில்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருநிலை பெரியாண்டவர் கோயில் என்பது தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் பெரியாண்டவர் கோயில், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

இக்கோயில் செங்கல்பட்டு (இதற்கு முன்னர் காஞ்சிபுரம்) மாவட்டத்தில் திருநிலை என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[2] கடல் மட்டத்திலிருந்து சுமார் 50 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°39'10.9"N, 80°05'20.9"E (அதாவது, 12.653017°N, 80.089141°E) ஆகும்.

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக பெரியாண்டவர் உள்ளார். இறைவி அங்காளபரமேசுவரி ஆவார். சித்தாமிர்த குளம் கோயிலின் தீர்த்தமாகும்.[2]

வரலாறு

சிவபெருமான் மனித வடிவில் மண்ணிற்கு வந்தபோது கண்ணுக்குத் தெரியாத நிலையில் 21 கணங்களும் உடன் வந்தன. அங்காளபரமேசுவரி சூலத்தை எறிந்ததும் அவை மண் கட்டிகளாக மாறின. சிவன் சுய உருவைப் பெற்றதும், அவையும் சிவகணங்களாக வெளிப்பட்டன. இதனைக் குறிக்கும் வகையில் 21 கணங்களும் லிங்கத்திருமேனிகளாக மாறின.சிவனும் நந்தியும் மனித உருப்பெற்றதால் இங்குள்ள நந்தி மனித உடலுடன் உள்ளது. விநாயகரும் இரண்டு கரங்களோடும் மனித உடலோடும் உள்ளார். இவருக்கு திருநீறே அபிஷேகப் பொருளாக உள்ளது.

திருவிழாக்கள்

பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads