செங்கல்பட்டு மாவட்டம்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

செங்கல்பட்டு மாவட்டம்
Remove ads

செங்கல்பட்டு மாவட்டம் (Chengalpattu District) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் நிறுவுவதற்கான அரசாணை 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.[1] தமிழகத்தின் 37-ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் அறிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் துவக்க விழா 29 நவம்பர் 2019 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது.[2] இம்மாவட்டத்தின் தலைநகரம் செங்கல்பட்டு நகரம் ஆகும்.

செங்கல்பட்டு
மாவட்டம்
Thumb
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்
Thumb
செங்கல்பட்டு மாவட்டம்: அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் செங்கல்பட்டு
பகுதி வட மாவட்டம்
ஆட்சியர்
ச. அருண்ராஜ்,
இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

மருத்துவர். பொ.
விஜயகுமார், இ.கா.ப.
வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 8
மாநகராட்சி 1
நகராட்சிகள் 4
பேரூராட்சிகள் 6
ஊராட்சி ஒன்றியங்கள் 8
ஊராட்சிகள் 359
வருவாய் கிராமங்கள் 636
சட்டமன்றத் தொகுதிகள் 7
மக்களவைத் தொகுதிகள் 3
பரப்பளவு 2944.96 ச.கி.மீ.
மக்கள் தொகை
25,56,244 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
603 XXX, 600 XXX
தொலைபேசிக்
குறியீடு

044
வாகனப் பதிவு
TN-19, TN-14, TN-22, TN-85 மற்றும் TN-11
இணையதளம் chengalpattu
Remove ads

வரலாறு

செங்கல்பட்டு மாவட்டம் முந்தைய சங்ககால தமிழகத்தில் தொண்டை மண்டலத்தில் ஒரு பகுதியாக இருந்தது. சங்ககால தமிழ் மன்னன் தொண்டைமான் இளந்திரையனின் கட்டுப்பாட்டில் இருந்தது இந்த செங்கல்பட்டு. சுதந்திர இந்தியாவுக்கு முன்பு செங்கல்பட்டு நகரத்தை தலைமை இடமாகக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டன.

சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை மாகாணத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக பிரிவு தலைமையகம் மட்டும் சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் செயல்பட்டது.

1967 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆனதும் சைதாப்பேட்டையில் இருந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமையிடத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்றினார். நிர்வாக நகரமாக காஞ்சிபுரமும், நீதி நகரமாக செங்கல்பட்டும் செயல்பட்டன.

1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை விமான நிலையம் வரை பரப்பளவில் மிக பெரிதாக இருந்ததால், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து நிறுவப்பட்ட புதிய செங்கல்பட்டு மாவட்டத் துவக்க விழா 29 நவம்பர் 2019 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது.[3]

Remove ads

புதிய செங்கல்பட்டு மாவட்டத்தின் பகுதிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பல்லாவரம், வண்டலூர் என 8 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.[4][5] இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்கள், 8 வருவாய் வட்டங்கள், 40 குறுவட்டங்கள் மற்றும் 636 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[6]

வருவாய் கோட்டங்கள்

  1. தாம்பரம் வருவாய் கோட்டம்
  2. செங்கல்பட்டு வருவாய் கோட்டம்
  3. மதுராந்தகம் வருவாய் கோட்டம்

வருவாய் வட்டங்கள்

Remove ads

உள்ளாட்சி & ஊராட்சி நிர்வாகம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகள் அமைந்துள்ளது. [7] மேலும் இம்மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது.[8]

மாநகராட்சி

நகராட்சிகள்

பேரூராட்சிகள்

ஊராட்சி ஒன்றியங்கள்

அரசியல்

மேலதிகத் தகவல்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், 16வது சட்டமன்றத் தொகுதி(2021-2026) ...
Remove ads

சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads