திருந்துதேவன்குடி கற்கடகேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருந்துதேவன்குடி - திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 42வது தலம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திருந்துதேவன்குடி கற்கடகேசுவரர் கோயில், பெயர் ...
Remove ads

தல வரலாறு

கற்கடம் என்றால் நண்டு. நண்டு பூசித்த தலமாதலால் ஈஸ்வரர் கற்கடேஸ்வரர் ஆனார்.[1] தற்பாேது இக்கோவில் நண்டான்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஊர் திருந்துதேவன்குடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தார். தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை கோமுகம் இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது. இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதை கண்காணித்த பொழுது நள்ளிரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலர் ஒன்று கோமுகம் வழியே ஈசனிடம் செல்வதுகண்டு வியந்தபோது உன்னால் நண்டாக சாபம் பெற்ற கந்தர்வனே மலர் கொண்டு பூசித்தான். உன்னை கண்டு பயந்து ஒளிந்து கொண்டுள்ளான் என ஈசனிடம் இருந்து அசரீரி கேட்டது. ஆடி அமாவாசை பூர நட்சத்திரத்தன்று காறாம் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்யும் போது லிங்கத்திருமேனியின் பிளவில் இருந்து பொன் நிற நண்டு வந்து காட்சி அளிக்கும் என்று வசிஷ்டமகாத்மியம் நூலில் கூறப்பட்டுள்ளது. 6-2-2003-ல் கும்பாபிஷேக முதல் நாள் யாகபூசையின் போது யாககுண்டத்தை நண்டு வலம் வந்த அதிசயம் நடந்ததை கண்டதாக கூறப்படுகிறது.மன்னர் ஒருவர் கடும்நோயால் பாதிக்கப்பட்டு இவ்வாலய ஈசனை வேண்டி குணம் அடைந்தார். அம்மன்னன் பிரதிஷ்டை செய்த அம்மனே அருமருந்தம்மை ஆகும். இது நோய் தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய் சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாக கருதப்படுகிறது. கோவில் வெளிப்புர சுவற்றில் மருத்துவர் மருந்து தயாரிப்பது போன்ற புடைப்புச்சிற்பம் காணப்படுகிறது.

Remove ads

அமைவிடம்

திருத்தேவன்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் திருவிசநல்லூர் அருகில் அமைந்துள்ளது.[1]

வழிபட்டோர்

நண்டு பூசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

சிறப்புகள்

இக்கோயில் பற்றிய பதிகத்தில் கொல்லிப் பண்ணில் அமைந்த 11 பாடல்கள் உள்ளன. இத்தலம் சுற்றிலும் வீடுகள் ஒன்றுமின்றி வயல் மத்தியில் தனிக் கோயிலாக உள்ளது என்னும் குறிப்பு ஒன்று உள்ளது.[2]

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள், இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள், இவை
திருந்து தேவன்குடித் தேவர் தேவு எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே [3]

வேதம் எங்கே திருந்துகிறது?
உணவு தரும் வயல்வெளியில்தானே!

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads