நண்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நண்டு (crab) நீர்நிலையில் வாழும் ஓர் உயிரினமாகும். நன்னீர், உவர்நீர் இரண்டிலும் வாழும் தன்மை உடையது. வாழும் நிலைக்கேற்ப பல்வேறு பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன.[2] இதில் சில இனங்கள் உணவாகவும் உட்கொள்ளப்படுகின்றன.
மில்லிமீட்டர் (mm) அகலமான நண்டுகள் முதல் கால் அகலம் நான்கு மீட்டர் (m) வரை வளரும் யப்பானியச் (Japanese) சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகின்றன.[3] நண்டுகள் பொதுவாகத் தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன.[4][5]
நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக்கொருமுறை மேலோடுகள் கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் கூட்டுக்கண்கள் இரண்டைக் கொண்டவை.
பெண் நண்டுகள் ஆண் நண்டுகளிலும் பார்க்க அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் முட்டைகளைக் கொண்டுள்ளன.
நண்டு மிகவும் பிரபலமான கடல் உணவு ஆகும். கடலுணவுகளில் 20% நண்டுகளே. ஆண்டுதோறும் ஒன்றரை மில்லியன் தொன்னுக்கும் (Ton) அதிகமான நண்டுகள் உணவாகின்றன.
Remove ads
நண்டு வகைகள்
- தேங்காய் நண்டு
- குளுவான் நண்டு
- நீலக்கால் நண்டு
- குதிரைலாட நண்டு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads