திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்[1] என்பது அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 25வது தலம் ஆகும்.
Remove ads
இறைவன், இறைவி
இத்தலத்தின் மூலவர் உத்வாகநாதர். தாயார் கோகிலா. இறைவன் கல்யாண சுந்தரர் வடிவங் கொண்டு கோகிலாம்பிகையை திருமணஞ் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
கோயில் அமைப்பு

ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. கோயிலின் வலப்புறம் விநாயகர் சன்னதி உள்ளது. இடப்புறம் நடராஜர் சன்னதியும் அம்மன் சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக கல்யாணசுந்தரர் காணப்படுகிறார். மூலவர் சன்னதியின் இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
அருகில் உள்ள திருத்தலம்
இவற்றையும் பார்க்க
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads