திருமணஞ்சேரி

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருமணஞ்சேரி (Thirumanancheri) (திரு மணம் சேரி) என்பது தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றின் அருகே அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தின் பெயர் சிவன் கடவுளிடமிருந்து வந்தது. திருமணம் என்றால் திருமணம்; சேரி என்பது கிராமம் அல்லது குக்கிராமத்தைக் குறிக்கிறது. சிவன் இந்த இடத்தில் பார்வதியை மணந்தார். எனவே இந்த கிராமம் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் இந்துக்கள் ஆன்மீக சுற்றுலாவிற்காக வரும் பிரபலமான இடங்களுள் ஒன்றாகும்.[1] இது 275 பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங்களில் ஒன்றாகும். ஆரம்ப இடைக்கால தேவாரப் பாடல்களில் தமிழ் சைவ நாயனமார்களான திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பட்ட சிவ ஸ்தலங்கள் ஒன்றாகும்.[2] இந்த கோயிலின் மற்றொரு பெயர் உத்வகநாதர் கோயில் என்பதாகும்.

இந்த ஊரின் அருகே அமைந்த மற்றொரு பிரபலமான கோயில் எதிர்கோல்பாடி கோயில் என்பதாகும். மணமகனான சிவனை அவரது மாமனார் பாரத முனியால் வரவேற்கப்பட்ட இடம், எதிர்கோல்பாடி.

Remove ads

எப்படி அடைவது

திருமணஞ்சேரி குத்தாலத்திற்கு அருகிலுள்ள மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. இது கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையினை இணைக்கும் நெடுஞ்சாலையில் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை சந்திப்பு மற்றும் குத்தாலம். புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், வழியாக மயிலாடுதுறையினை சென்னையுடன் இணைக்கும் பேருந்துகள் இவ்வழியே செல்கின்றது. பாதை எண். 5 நகரப்பேருந்து மயிலாடுதுறையிலிருந்து திருமணஞ்சேரி செல்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads