திருவண்ணாமலை (திரைப்படம்)

பேரரசு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

திருவண்ணாமலை (திரைப்படம்)
Remove ads

திருவண்ணாமலை (Thiruvannamalai) 2008ஆம் ஆண்டில் பேரரசு இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜுன், பூஜா காந்தி, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படமானது எதிர்பார்த்த அளவைவிட குறைவான அளவாகவே வெற்றியைப் பெற்றது.[1] இத்திரைப்படம், பின்னர் "மெயின் ஹூன் விநாஸ்யக்" என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டும், தெலுங்கு மொழியில் "ஜெய் சாம்பசிவா" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியானது.

விரைவான உண்மைகள் திருவண்ணாமலை, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

அர்ஜுன், பூஜா காந்தி, கருணாஸ், சாய் குமார், விதார்த், வையாபுரி (நடிகர்), சிட்டி பாபு (நடிகர்), சரவணா சுப்பையா, பேரரசு (கௌரவத் தோற்றம்)

கதைச்சுருக்கம்

ஈஸ்வரன் (அர்ஜுன்) கும்பகோணத்தில் கேபிள் சேனலை நேர்மையாக நடத்திவரும் வாலிபன். சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எப்பொழுதும் தட்டி கேட்கும் குணம் கொண்டவன். தனது கேபிள் சேனல் மூலமாக, எம்.எல்.ஏ பூங்குன்றனின் (சாய் குமார்) ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. சுவாமி பார்ப்பதற்கு ஈஸ்வரன் போல் இருப்பான். அதனால் ஆள் மாறாட்டம் ஏற்படுகிறது. ஈஸ்வரன் இடத்தில் இருக்கும் சுவாமி அனைத்து சிக்கல்களையும் அகிம்சையின் பால் நின்று தீர்த்துவைக்கிறான். பின்னர், துரைசிங்கம் (கருணாஸ்) பூங்குன்றனால் கொல்லப்படுகிறான். இறுதியில், சுவாமிக்கு என்னவானது? பூங்குன்றனை ஈஸ்வரன் எவ்வாறு பழிவாங்கினான்? போன்ற கேள்விகளுக்கு விடைகாணுதலே மீதிக் கதையாகும்.

Remove ads

ஒலிப்பதிவு

படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் ஸ்ரீகாந்த் தேவா ஆவார். அனைத்து பாடல்களின் வரிகளையும் எழுதியவர், இயக்குநர் பேரரசு (திரைப்பட இயக்குநர்) ஆவார். ஏழு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு திவோ நிறுவனத்தால் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தயாரிப்பு

ஜனவரி 2008 யில் பழனி படத்தின் வெளியீட்டிற்கு பின், பரத் நடிக்கும் திருத்தணி என்ற படத்தை இயக்க போவதாக பேரரசு அறிவித்தார்.[2] ஆனால், பரத் மற்ற இரு படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால், அர்ஜுன் நடிக்கும் திருவண்ணாமலை என்ற பெயர் கொண்ட திரைப்படத்தை இயக்கப்போவதாக பேரரசு அறிவித்தார்.[3][4][5][6]

சன்யா வாகில் கதாநாயகியாக துவக்கத்தில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், இறுதியில், பூஜா காந்தி கதாநாயகியாக நடித்தார்.[7][8]

Remove ads

வரவேற்பு

விறுவிறுப்பான கதை திரைக்கதை இருந்தாலும், பல இடங்களில் லாஜிக் இல்லை என்றும்,[9] பேரரசு பாணியில் அர்ஜுனின் அதிரடி திரைப்படம் என்றும்,[10] பேரரசுவின் முந்தய படத்தை நினைவூட்டும் வகையிலும், பழைய சாம்பார் போன்ற கதையை இத்திரைப்படம் கொண்டிருந்ததாகவும்,[11] விமர்சனம் செய்யப்பட்டது.

வசூல்

வணிகரீதியாக இத்திரைப்படம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads