திருவத்திபுரம் நகராட்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவத்திபுரம் பொதுவாக செய்யாறு (ஆங்கிலம்:thiruvathipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டம், செய்யாறு நகரத்தில் 27 வார்டு உருப்பினர்களைக் கொண்ட் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.[4] தற்போது மக்கள் இதனை செய்யாறு என்றும் அழைக்கின்றனர்.
![]() | இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வருவாய் கோட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது. தற்போது புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி இப்பகுதியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையம் ஓன்று உள்ளது. புகழ்பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில் இந்நகராட்சியில் அமைந்துள்ளது. மேலும் நகராட்சி எல்லைக்குள் மாவட்ட தலைமை மருத்துவமனை, துணை ஆட்சியர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி ,நூற்றாண்டு கண்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி , அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பள்ளி கல்வி மாவட்ட அலுவலகம், சுகாதார மாவட்ட அலுவலகம், பத்திர பதிவு மாவட்ட அலுவலகம், மேலும் பல அலுவலகங்கள் செயல்படுகின்றன. பாலாற்றின் துணையாறான செய்யாறு இவ்வூர் வழியாக செல்கிறது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35201 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.திருவதிபுரம் மக்களிள் கல்வியறிவு பெற்றோர் 62.55% ஆகும்.
நகராட்சி அமைவிடம்
திருவத்திபுரம் நகராட்சி செய்யாறு நகருக்குள் அமைந்துள்ளது புளிரம்பாக்கம் ஊராட்சி , கீழ்புதுப்பாக்கம் ஊராட்சி , பைங்கினர் ஊராட்சி , வடதண்டலம் ஊராட்சி , அனக்காவூர் ஊராட்சி ஆகிய ஊராட்சிகள் திருவத்திபுரம் நகராட்சி எல்லைகளாக அமைந்துள்ளன
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads