திருவலஞ்சுழி வெள்ளைவிநாயகர் கோயில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

திருவலஞ்சுழி வெள்ளைவிநாயகர் கோயில்
Remove ads

திருவலஞ்சுழி வெள்ளைவிநாயகர் கோயில் அல்லது சுவேத விநாயகர் என்பது கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ள திருவலஞ்சுழியில், கும்பகோணம்-தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் வளாகத்தில் உள்ளது.

Thumb
திருவலஞ்சுழி விநாயகர் கோயிலுக்கு முன்பாக வெள்ளைவிநாயகர் சன்னதியின் முன்புறம் உள்ள கொடிமரம்
Thumb
விநாயகர் சன்னதி

சுவேத விநாயகர்

கணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. இக்கோயில் வளாகத்தில் உள்ள சுவேத விநாயகர் ஆலயம் சோழர் காலத்திலேயே எடுக்கப்பெற்றுள்ளது. [1]

Thumb
பலகணி

அமைப்பு

வலஞ்சுழிநாதர் கோயிலின் முதன்மை வாயிலைக் கடந்தால் கோயிலின் வலப்புறம் பைரவர் சன்னதியும், இடப்புறம் ஜடாதீர்த்தமும் ஜடா தீர்த்த விநாயகர் சன்னதியும் உள்ளன. தொடர்ந்து பலிபீடம், மூஞ்சுறு, கொடி மரம் உள்ளன. அதற்கடுத்து வெள்ளை விநாயகர் கோயிலின் தூண் மண்டபமும் கருவறையும் அழகான வேலைப்பாடுகளுடன் உள்ளன. புகழ்பெற்ற திருவலஞ்சுழி பலகணி (கருங்கல்லால் ஆன ஜன்னல்) இச்சன்னதியில் உள்ளது. கல்லால் ஆன விளக்குகளைப் போன்ற அமைப்பு இச்சன்னதியின் தனித்துவங்களில் ஒன்றாகும். தூண்களில் நுணுக்கமான சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன. கொடுங்கை பார்ப்பதற்கு அழ்காக உள்ளது. விநாயகர் சன்னதியின் வலப்புறம் நால்வர் சன்னதி உள்ளது.

Remove ads

மற்றொரு வெள்ளைவிநாயகர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் மற்றொரு வெள்ளை பிள்ளையார் கோயில் தஞ்சாவூர் நகரில் உள்ளது.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

படத்தொகுப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads