திருவாடானை
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவாடானை (Tiruvadanai) என்பது தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர் ஆகும். இது திருவாடானை வட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், திருவாடானை ஊராட்சியின் நிர்வாகத் தலைமையிடமாகவும் அமைந்துள்ளது. இவ்விடத்தில் புகழ்பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இவ்வூர் அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில், தொண்டி, ஓரியூர் முதலியன உள்ளன. திருவாடனையின் சங்ககாலப் பெயர் அட்டவாயில் என்பதாகும்.
Remove ads
அமைவிடம்
திருவாடனை மதுரையிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் தேவகோட்டையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் இராமநாதபுரம் நகரத்திற்கு வடக்கே 53 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருவாடானையில் 2,426 வீடுகளில் 9,702 மக்கள் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 4916 ஆண்கள், 4786 பெண்கள் ஆவார்கள். திருவாடானை மக்களின் சராசரி கல்வியறிவு 84.60% ஆகும். இதில் ஆண்களின் சராசரி எழுத்தறிவு 91.55%, பெண்களின் எழுத்தறிவு 77.43% ஆகும். திருவாடானை மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 957 பேர் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,907 மற்றும் 15 ஆகவுள்ளனர்.[4]
Remove ads
சிறப்புகள்
சூரியனால் வழிபடப்பட்டதாக கருதப்படும் ஆடானை நாதர் கோவில் என அழைக்கப்படும் சிவன் கோவில் இங்கு உண்டு. திருவாடானையில் அமைந்துள்ள ஆதிரத்தினேசுவரர் கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads