திருவாமூர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருவாமூர் (Thiruvamoor) என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

விரைவான உண்மைகள் திருவாமூர், நாடு ...
Remove ads

பெயர்

திருவாமூர் என்ற பெயருக்கு (திரு+ஆம்+ஊர்) என்றால், எல்லா வளங்களும் நலங்களும் ஆகின்ற ஊர் - வளர்ச்சி பெறுகின்ற ஊர் என்று ஒருவகைப் பொருள் சொல்லப்படுகிறது.[1]

அமைவிடம்

இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 34 கி.மீ தொலைவிலும், பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 194 கி.மீ தொலைவிலும் உள்ளது.[2]

Thumb
திருவாமூர் பெயர் பலகை

ஊர் சிறப்பு

இந்த ஊர் நாயன்மார்களான திலகவதியாரும், திருநாவுக்கரசரும் பிறந்த பெருஞ் சிறப்பிற்குரியது. இந்த ஊரில் நாவுக்கரசர் பிறந்த மனையில் அவருக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

வழிபாட்டுத் தலங்கள்

Thumb
திருவாமூர் பசுபதீசுவரர் கோவிலின் உள்தோற்றம்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads