திலகநாயகம் போல்

From Wikipedia, the free encyclopedia

திலகநாயகம் போல்
Remove ads

லயனல் திலகநாயகம் போல் (L. Thilakanayagam Paul, 6 சூலை 1941 - திசம்பர் 5, 2009[1], அகவை 68) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்று சங்கீத பூசணம் பட்டம் பெற்ற முதல் யாழ்ப்பாணத்தவர் என்று அறியப்படுபவர்.

விரைவான உண்மைகள் லயனல் திலகநாயகம் போல், பிறப்பு ...
Remove ads

வானொலியில்

இலங்கை வானொலியில் இசைக்கச்சேரிகளை வழங்கியதோடு, பல மெல்லிசைப் பாடல்களையும் பாடியிருக்கிறார். ரூபவாகினி தொலைக்காட்சி, மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் முதற்தர கலைஞராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.

ஆசிரியப்பணி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இசையாசிரியராக பணியாற்றிய இவர், பதவி உயர்வுபெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். யாழ் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் பணியாற்றியுள்ளார்.

பட்டங்களும் விருதுகளும்

இவர், சுர ராகநய விநோத சுரபி, இலங்கை அரசின் கலாபூசணம், கலைச்செம்மல் ஆகிய பட்டங்களையும் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இசைக்கச்சேரிகள்

இவர் இலங்கையில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இசைக்கச்சேரிகளை வழங்கியிருக்கிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads