தீக்குச்சி (திரைப்படம்)
2008 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தீக்குச்சி (Theekuchi) என்பது 2008 ஆண்டைய இந்திய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். ஏ. எல். ராஜா இயக்கிய இப்படத்தில் முன்னணி வேடங்களில் ஜெய் வர்மா, புதுமுகம் மைத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். வடிவேலு, சந்தானம், பானுப்பிரியா, ஆஷிஷ் வித்யார்த்தி, தண்டபாணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சிறீகாந்து தேவா இசையமைத்துள்ளார். இந்த படம் 14 மார்ச் 2008 அன்று வெளியிடப்பட்டது.[1][2] இப்படம் வினுத லால் மற்றும் பிரம்மானந்தம் ஆகியோரைக் கொண்டு கூடுதல் காட்சிகள் எடுக்கபட்டு தெலுங்கு மொழியில் அகிரவ்வா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யபட்டு 2014 இல் வெளியிடப்பட்டது.[3][4]
Remove ads
கதை
அரசாங்க நிலத்தில் ஒரு பள்ளியைக் கட்ட விரும்பிய தனது தாயை ( பானுப்ரியா ) கொன்றவர்களைப் பழிவாங்கும் நோக்கில் சக்தி (ஜெய் வர்மா) ஈடுபட்டுள்ளார். உள்ளூர் கள்ளசாராய வியாபாரியும் ரவுடியுமான பசுபதி பாண்டியன் ( ஆஷிஷ் வித்யார்த்தி ), கல்வி அமைச்சரின் ( தண்டபாணி ) உதவியுடன், சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரியைத் துவக்குகிறார். கட்டாய நன்கொடைகளைப் பெற்று, கல்லூரியில் சேர்க்கைகளை நடத்துவதன் மூலம் பசுபதி பணக்காரராகவும் சக்திவாய்ந்தவராகவும் மாறுகிறார். பணம் செலுத்த இயலாத ஏழை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது காணாமல் போகிறார்கள். சக்தியும் பசுபதியின் மகளான கதாநாயகி (மித்ரியா) உட்பட அவரது நண்பர்களும் கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் அநீதிக்ககு எதிராக போராடுகிறார்கள். அவர்கள் இறுதியில் எவ்வாறு வெற்றிபெற்று நீதியை நிலைநாட்டுகிறார்கள் என்பதுதான் திரைப்படம்.
Remove ads
நடிகர்கள்
- ஜெய் வர்மா சக்தியாக
- மேனகை
- வடிவேலு (நடிகர்) குறவனாக
- சந்தானம்
- பானுப்ரியா (நடிகை) சக்தியின் தாயாக
- ஆஷிஷ் வித்யார்த்தி பசுபதி பாண்டியனாக
- தண்டபாணி (நடிகர்) கலவியமைச்சராக
- தம்பி ராமையா குரங்கு ராமசாமியாக
- கொச்சி ஹனீஃபா காசியாக
- பாண்டி குறவனின் மகனாக
- பூவிலங்கு மோகன்
- ராஜீவ்
- சுமன் செட்டி
- வினு சக்ரவர்த்தி
- எஸ். எஸ். ராஜேந்திரன்
- வாசு விக்ரம்
- ஷோபா
- காளிதாஸ்
தயாரிப்பு
தீக்குச்சி படத்தை ஸ்டார் மூவி மேக்கருக்காக ஜி. ஏ. லூகாஸ் தயாரித்தார். முன்னதாக பார்த்திபன் நடித்த நினைக்கத்த நாளில்லை படத்தை இயக்கிய ஏ. எல். ராஜன் இப்படத்தின் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டார். டிஸ்கோ சாந்தியின் சகோதரரும், முன்பு அழகிய தீயே படத்தில் நடித்தவருமான ஜெய் வர்மா படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.[5][6] எஸ். எஸ். ராஜேந்திரன் 2014 இல் இறப்பதற்கு முன்பு கடைசியாக நடித்த படம் இதுவாகும்.[7]
இந்த படம் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு மதுரை, திருப்பரங்குன்றம், கொடைக்கானல், நாகர்கோயில், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தபட்டது. தயாரிப்பாளர் தங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று கேரளாவைச் சேர்ந்த நடிகைகள் புகார் கூறியபோது படம் சர்ச்சைக்கு உள்ளானது.[8] படப்பிடிப்பு 2006 இல் முடிவடைந்தது. 2007 இல் வெளியிட முடிவு செய்யப்பட்டது, ஆனால் அது தவறிப்போய் இது 2008 இல் வெளியிடப்பட்டது.
இசை
படத்திற்கான இசையை சிறீகாந்து தேவா அமைக்க, பா. விஜய், சினேகன், நந்தலாலா, விஜய் சாகர். ஜெயாரவி ஆகியோர் பாடல் வரிகளை எழுதினர்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads