தீபிகா சிக்லியா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தீபிகா சிக்லியா தோபிவாலா (Dipika Chikhlia Topiwala பிறப்பு 29 ஏப்ரல் 1965) ராமானந்த் சாகரின் தொலைக்காட்சித் தொடரான ராமாயனத்தில் [1] தேவி சீதாவாக நடித்ததற்காகவும் மற்ற இந்திய தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதற்காகவும் அறியப்பட்ட ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் தனது முதல் படமான சன் மேரி லைலாவில் (1983), ராஜ் கிரணுக்கு இணையாகவும், ராஜேஸ் கன்னாவுடன் மூன்று இந்திப் படங்களில் நடித்தற்காகவும் அறியப்பட்டார், இவை ரூபே தஸ் கரோட் , கர் கா சிராக் மற்றும் குடாய் ஆகும் .[2] இவர் ஒரு மலையாளப் படமான இதிலே இனியும் வரு (1986), மம்முட்டியுடன் நடித்தார், இவரது கன்னட வெற்றிப் படங்களான ஹோசா ஜீவனா திரைப்படத்தில் ஷங்கர் நாக் மற்றும் இந்திரஜித் (1989) அம்பரீசனுடன் நடித்தார் . பிரபுவுடன் இவர் தமிழில் வணிக ரீதியில் வெற்றி பெற்ற நாங்கள் எனும் திரைப்படத்திலும் (1992) மற்றும் ஒரு வங்காள படமான ஆஷா ஓ பலோபாஷா (1989),வில் ப்ரோசன்ஜித் சாட்டர்ஜிக்கு இணையாக நடித்தார். குஜராத்தி உச்ச நட்சத்திரம் நரேஷ் கனோடியாவுக்கு இணையாக ரஹேஜோ ராஜ் மற்றும் லாஜு லக்கன் போன்ற சில குஜராத்தி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Remove ads

தொழில் வாழ்க்கை

ஆரம்ப கால வாழ்க்கையில்

சிக் மேரி லைலா (1983), ராஜ் கிரணுக்கு ஜோடியாக சிக்லியா நடிகையாக அறிமுகமானார். 1985 இல் தாதா தாடி கி கஹானி என்ற தொலைக்காட்சித் தொடரில் இவர் நடித்தார். அதேசமயம் இவர் பகவான் தாதா (1986), காலா தண்ட கோரே லாக் (1986) மற்றும் டூரி (1989) போன்ற வணிக ரீதியில் வெற்றி பெற்ற படங்களில் துணை நடிகராக நடித்தார் மற்றும் திகில் திரைப்படமான சீக் (1986) மற்றும் ராத் கே அந்தேர் மே (1987) ஆகிய படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்தார்.

வெற்றி (1987-95)

பின்னர் 1987 ல், சிக்லியா, ராமானந்த் சாகரின் தொலைக்காட்சித் தொடரான ராமாயணத்தில் சீதாவின் கதாபாத்திரத்தில் நடித்தார். ராமாயணத்தில் நடிப்பதற்கு முன்பு, இவர் ராமானந்த் சாகரின் விக்ரம் இவுர் பீட்டலின் ஒரு பகுதியாக இருந்தார். தி சுவார்டு ஆஃப் திப்பு சுல்தான் மற்றும் லவ் குஷ் போன்ற வெற்றி பெற்ற தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து முன்னணி கதாபாத்திரங்களைப் பெற்றார் . குடாய் படத்தில் முன்னணிக் கதாப்பத்திரத்தில் நடித்தாஎ, ஆனால் அந்த படம் 1994 இல் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. இவர் கர் கா சிராக் மற்றும் குடாய் ஆகிய இரண்டு படங்களில் ராஜேஷ் கன்னாவுடன் இணைந்து நடித்தர். முதன்மைக் நாயகியாக நடித்த கன்னடத் திரைப்படமான சங்கர் நாக் 1990 ஆம் ஆண்டில் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.

பிற்கால தொழில்

கலர்ஸ் குஜராத்தி தொலைக்காட்சியில் சுத்த சேடா (2017) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சிக்லியா நடித்தார். குஜராத்தி திரைப்படமான நாட்சம்ராட் ஆகஸ்ட் 2018 இல் வெளியிடப்பட்டது.

இவர் கடைசியாக பாலா 2019 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியான திரைப்படத்தில் யாமி கௌதமின் தாயாக நடித்தார்.[3] சுதந்திரப் போராளி - சரோஜினி நாயுடுவின் வரவிருக்கும் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார்.

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

சிக்லியா மும்பையின் புறநகர்ப் பகுதியான பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் வளர்ந்தார். 

இவர் ஏமந்த் தோபிவாலாவினைத் திருமணம் செய்துகொண்டார் [4] இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[5]

சான்றுகள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads