தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் என்பது சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற ஒரு சிவாலயமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1] இக்கோயில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தின் தீர்த்தனகிரி என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற சிவக்கொழுந்தீசுவரர் கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
Remove ads

சிறப்பு

இத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி. மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக கொன்றை மரமும் உள்ளன. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்ததிற்கு ஜாம்புவதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது.

தல புராணம்

நாள்தோறும் சிவனடியார்களுக்கு உணவிட்டு பின் உணவருந்தும் வழக்கமுடைய தம்பதிகள் தீர்த்தனகிரி தலத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களை சோதிக்கும் பொருட்டு சிவபெருமான் சிவனடியார்களை அவர்கள் கண்களில் படாமல் இருக்கச் செய்தார். தளராமல் சிவனடியாரைத் தேடிய தம்பதியினருக்கு சிவபெருமானே முதியவராக சென்று அவர்கள் தோட்டத்தில் வேலையும் செய்து உணவருந்தினார். அவர் விதைத்த திணைப்பயிர்கள் அன்றே அறுவடைக்குத் தயாராக இருந்தைக் கண்டு தம்பதிகள் சிவபெருமானை அறிந்தனர்.

Remove ads

தலச் சிறப்பு

  • அனைத்து ஆலயங்களிலும் ஒரே ஒரு சண்டேசுவர நாயனார் மட்டுமே அருள் பாலிப்பார், எனினும் இங்கு இவர் இவரது மனைவியுடன் சேர்ந்து அருள் பாலிக்கின்றார்

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads