தும்ரான் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தும்ரான் இராச்சியம் (Dumraon Raj) என்பது ஒரு இந்தியாவின் மத்திய காலத்தில் ஒரு தலைமையாகவும் பின்னர் பீகார் மாநிலத்தின் சாகாபாத் மாவட்டத்தில் (இப்போது பக்சர் மாவட்டம்) ஒரு ஜமீன்தாரி தோட்டமாகவும் இருந்தது. [1] இதன் ஆட்சியாளர்களுக்கு முகலாய சக்கரவர்த்தி 'இராஜா' என்ற பட்டத்தை வழங்கினார். மேலும் 1000 ஜாட்டுகளும், 800 மரங்களையும் கொண்ட ஒரு நிலம் இருந்தது. அவை பீகாரில் இருந்த மிகப்பெரிய தோட்டங்களில் ஒன்றாகும். [2]
அவர்கள் பிரகம்பூர் மேளாவின் முக்கிய புரவலர்களாக இருந்தனர். [3]
Remove ads
தோற்றம்

13 ஆம் நூற்றாண்டில் மேற்கு பீகார் நகருக்குச் சென்ற மால்வாவின் பர்மர் ஆட்சியாளர்களான உஜ்ஜெனியா ராஜ்புத்திரர்கள் தும்ரான் இராச்சியத்தை நிறுவினார்கள். [4] உஜ்ஜெனியர்களின் பல்வேறு கிளைகள் பீகாரில் சகதீசுபூர், சகாராபூர், தும்ரான் உள்ளிட்ட பல்வேறு தோட்டங்களை நிறுவின. [5]
போச்பூரின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இராஜா நாராயணன் மால், முகலாய பேரரசர் ஜஹாங்கிருடமிருந்து நில மானியம் பெற்றார். மேலும் கி.பி 1604 இல் 'இராஜா' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அவரது வழித்தோன்றல், இராஜா கொரில் சிங், என்பவர் நாராயண் மால் தோட்டத்தின் தலைநகரை தும்ரானுக்கு மாற்றி "ஹொரில்நகர்" என்றும் அழைத்துக் கொண்டார். [6]
Remove ads
ஆட்சியாளர்கள்
தும்ரான் இராச்சியத்தைப் பற்றிய வரலாற்று ஆவணங்கள் தவாரிக்-இ-உஜ்ஜெனியா என்ற ஆவணத்தில் உள்ளன. அவை தலைவர்களின் வரலாற்றையும், முந்தைய சில ஆட்சியாளர்களையும் விவரிக்கின்றன [1] :
- ராஜா நாராயண் மால்
- ராஜ பிரபால் சிங்
- ராஜா சுஜன் சிங்
- ராஜா கொரில் சிங்
- ராஜா சதர்தாரி சிங்
- ராஜா விக்ரமாதித்ய சிங்
- மகாராஜா ஜெய் பிரகாசு சிங்
மேலும் காண்க
- உஜ்ஜினியா
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads