துருவ நட்சத்திரம் (2018 திரைப்படம்)
கௌதம் மேனன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெளிவரயிருக்கும் தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram), கௌதம் மேனனின் இயக்கத்தில்[1], கௌதம் மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா, செந்தில் வீராசாமி, பி. மதன் ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம்.. இத்திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் மனோஜ் பரமஹம்சாவின், ஜோமன் டி. ஜான், சந்தான கிருட்டிணன், இரவிச்சந்திரன் ஆகியோரின் ஒளிப்பதிவிலும், ஹாரிஸ் ஜயராஜின் இசையிலும், ஆண்டோனியின் படத்தொகுப்பிலும், 18, மே 2018இல் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு சனவரி 2017 இல் தொடங்கப்பட்டது. இப்படம் ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.[2]
இந்த கட்டுரை எதிர்காலத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் பற்றியது. இத்திரைப்படத்தின் வெளியீட்டு நாள் அண்மிக்கும் போது இதன் விவரங்கள் மாற்றமடையலாம். |
Remove ads
நடிப்பு
- விக்ரம் -ஜான்/ யோகன்/ துருவ்.
- ஐஸ்வர்யா ராஜேஷ் - இராகிணி.
- ரிது வர்மா - அனுபமா.
- பிரித்விராஜ் சுகுமாரன் -டார்க்மேன
- பார்த்திபன் - திரு. கேவாக
- சிம்ரன்
- ராதிகா
- திவ்யதர்சினி
- சிராவந்தி சாய்நாத்
- மாயா எஸ். கிருஷ்ணன்
- சதீஸ் கிருஷ்ணன்
- முன்னா
- வம்சி கிருஷ்ணா
- சலிம் பாய்க்
- பிரீத்தி நெடுமாறன்
படப்பணிகள்
இப்படத்தின் திரைத்துளிக்கான காட்சிகளை நியூயார்க் நகரத்தில் படமாக்கப்பட்ட பிறகு 2017 சனவரியல் முதற்கட்டப்படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் குன்னூருக்குச்சென்றனர். குன்னூர் நகரத்தில் சிறிய அளவில் படப்பிடப்பை நடத்திய பிறகு படக்குழுவினர் எஞ்சியுள்ள படப்பிடிப்பிற்காக சென்னைக்குச்சென்றனர்.[3][4] துருக்கியின் எல்லைப்பகுதியில் 24 மணிநேரமாக ஆவணங்களில் ஏற்பட்ட சிக்கலால் சிக்கிய துருவ நட்சத்திரம் படக்குழுவினரின் சிக்கலை இயக்குநர் எளிதாக தீர்த்தார்.[5]
Remove ads
இசை
இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்து வருகின்றார்.
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads