திருத்துறையூர்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருத்துறையூர் (Thiruthuraiyur) என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். திருத்துறையூர் ஊராட்சி பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[1]

மக்கள் வகைப்பாடு

இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 31 கி.மீ தொலைவிலும், அண்ணாகிராமத்தில் இருந்து 4 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 185 கி.மீ தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 956 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4092 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2079, பெண்களின் எண்ணிக்கை 2013 என உள்ளது. மக்களின் எழுத்தறிவு விகிதம் 65.3 % ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்[2]

Remove ads

வரலாறு

துறையூர் சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று. துறையூர் ஓடைகிழார் என்னும் புலவர் இவ்வூரில் வாழ்ந்துவந்தார்.இவ்வூரில் ஓடை எனப் பெயர் கொண்ட ஆறு ஒன்று ஓடியது.இதனால் இது “தண்புனல் வாயில் துறையூர்” எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலவர் கடையெழு வள்ளல்களில் ஒருவனான வேள் ஆய் அண்டிரனை வாழ்த்தும்போது அவன் துறையூர் ஓடை ஆற்று மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல காலம் நலமுடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.[3]

திருத்துறையூர் சைவ சமயத்தின் சந்தானக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியார் பிறந்து வாழ்ந்தத் திருத்தலம். திருவாவடுதுறை ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ள இவரது ஜீவசமாதியும் இங்கு அமைந்துள்ளது. [4].மாமன்னர் விக்ரமாதித்தன் மற்றும் மகாகவி காளிதாசர் ஆகியோருக்கு அருள் புரிந்த அஷ்டபுஜ மகாகாளியம்மன் திருக்கோயிலும் திருத்துறையூரில் அமைந்துள்ளது.[4]

Remove ads

வழிபாட்டுத் தலங்கள்

திருத்துறையூரில் திருத்தளூர் சிஷ்ட குருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இத்தலத்தை நாரதர்,வசிட்டர்,அகத்தியர், சூரியன் முதலானோர் வழிபட்டனதர் தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads