துறையூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துறையூர் (ஆங்கிலம்:Thuraiyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
துறையூர் வட்டத்தில் பருத்தி, வெங்காயம், சீரக சம்பா நெல் விவசாயம், நகை தொழில் பிரதானமாக உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் மட்டும் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகும்.[3]
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 8,674 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 32,439 ஆகும். அதில் 15,964 ஆண்களும், 16,475 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,032பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2936 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,897 மற்றும் 193 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.36%, இசுலாமியர்கள் 3.27%, கிறித்தவர்கள் 1.3% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர்.[4]
Remove ads
கோயில்கள்
இங்கு ஐந்து புராதன கோயில்கள் உள்ளன. சிவன் கோயில், பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் (பெருமாள் மலை மேலே), கோவிந்தராஜ பெருமாள் கோயில் (பெருமாள் மலை கீழே) மற்றும் காசி விஸ்வநாதர் கோயில். சைவமும் வைணவமும் தழைத்து வளர்ந்த ஊர் துறையூர்.
சிவன் கோயில்
துறையூரிலிரிந்து ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள இந்தக் கோயிலின் பெயர் "அருள்மிகு நந்திகேஸ்வரர் ஆலயம்". இந்தக் கோயிலின் பொருட்டு துறையூருக்கு நந்திகேச்சுரம் என்றும் ஒரு பெயர் இருந்தது. மேலும் தீர்த்த புரி, வேணுபுரி என்ற பெயர்கள் இருந்ததற்கான சான்றாக இந்தக் கோயிலில் தீர்த்தபுரீஸ்வரர் மற்றும் வேணுபுரீஸ்வரர் சிலைகள் உள்ளன. இக்கோயில் அப்பர் பெருமானால் "நாடகமாடிட நந்திகேச்சுரம்" என்றும் "நல்ல துறையூர்" என்றும் பாடல் பெற்ற தலம்.
பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்
துறையூரிலிரிந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் உள்ள புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயில் பெருமாள் மலையின் மேலே 960 அடி (290 மீ) உயரத்தில் உள்ளது. மலைக்கு மேலே செல்ல 5 கி மீ மலைப்பாதை உள்ளது. மேலும் நடந்து செல்வதற்கு 1500 படிகளும் படிக்கட்டில் ஏறுவோர் இளைப்பாற இரண்டு மண்டபங்கள் இடையிடையே கட்டப்பட்டுள்ளன. கரிகால சோழனின் பேரன் ஒருவர் தன் ஆட்சியின் எல்லைப் பகுதியில் இருந்த இந்த மலையின் மீதுள்ள ஒரு இலந்தை மரத்தடியில் தவமியற்றிய போது பெருமாள் வேங்கடாச்சலபதியாக பிரசன்னமாகி காட்சியளித்ததாகவும், அந்த மன்னனே இக்கோயிலில் உள்ள கருப்பண்ணார் அல்லது வீராசாமியாக வழிபடப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இங்குள்ள தசாவதார மண்டபத்தில் இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணில் தட்டும்போதும் ஒவ்வொரு விதமான இசை கேட்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வழிபடுவது பிரசித்தி பெற்றது. மேலும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் பங்குகொள்கிறார்கள்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads