து. கிருஷ்ணசாமி வாண்டையார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
து. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் 01.09.1955–ல் பிறந்தவர். இவர் பி. டெக். (B.Tech.) வரை படித்து உள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஏற்கனவே, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும், தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவராகவும் பதவி வகித்து இருந்தார்.
இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ராமநாதன் துளசி அய்யா வாண்டையார் என்ற மகனும், பத்ம பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.
இவரது தந்தை பெயர் கி. துளசியா வாண்டையார். இவர் கடந்த 1991–96லில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[1]
Remove ads
கல்வி நிறுவனம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகவும் பழமையான அருள்மிகு வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரியினை 1956இல் நிறுவி இப்பகுதி மக்களுக்கு கல்விப்பணியாற்றி வருகிறார்.[2]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads