கி. துளசியா வாண்டையார்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ணசாமி துளசி அய்யா வாண்டையார் (Krishnasami Thulasiah Vandayar, மே 11 1929 – மே 17 2021) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். இவர் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1991 முதல் 1996 வரை பணியாற்றியுள்ளார்.[1]
Remove ads
பிறப்பு
துளசி அய்யா வாண்டையார் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை அருகே உள்ள பூண்டி கிராமத்தில் கிருஷ்ணசாமி வாண்டையார் பொன்னம்மாள் தம்பதியருக்கு மகனாக 1929ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி பிறந்தார்.[2]
கல்வி
வாண்டையார் தனது பள்ளிக் கல்வியினை ஏற்காட்டில் உள்ள மாண்ட்போர்டு பள்ளியிலும், உயர்கல்வியினைச் சென்னை லயோலா கல்லூரியிலும் கற்றார். தமிழோடு ஆங்கிலம், சமசுகிருதத்திலும் புலமைப்பெற்றிருந்தார். இவர் 'இன்ப வாழ்வு,' 'மனோரஞ்சிதம், குரல் கொடுக்கும் வானம்பாடி, பயணங்கள் தொடரும், செல்வச்சீமை ஐரோப்பா, ராக பாவம், வழிபாடு' மற்றும் ஆங்கிலத்தில், 'ஏ மெலோடியஸ் ஹார்மனி (A Melodious Harmony)' உள்ளிட்ட பல பனுவல்களை எழுதியுள்ளார்.[3]
Remove ads
திருமண வாழ்க்கை
வாண்டையார் உக்கடை அப்பாவு தேவரின் மகள் பத்மாவதியை கடந்த 1954ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் என்ற மகனும் புவனேசுவரி என்ற மகளும் உள்ளனர்.[4]
அரசியல்
சமூக அக்கறை உள்ள இவர் இளமைக்காலம் முதலே இந்திய தேசிய காங்கிரசில் இணைத்துக்கொண்டு தீவிரமாக பணியாற்றி வந்தார். ஒன்றியத் தலைவர், தஞ்சை மாவட்ட இளைஞர் காங்கிரசு தலைவர், மாவட்ட காங்கிரசு தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்த இவர் 1991லிருந்து 1996 வரை தஞ்சாவூர் மக்களவை உறுப்பினராக இருந்தார்.
கல்வி நிறுவனம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகவும் பழமையான அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரியினை 1956இல் நிறுவி இப்பகுதி மக்களுக்கு கல்விப்பணியாற்றி வந்தார்.[5]
இறப்பு
வாண்டையார் வயது மூப்பு காரணமாக தன் 93வது வயதில், 2021ஆம் ஆண்டு மே 17 அன்று சென்னையில் காலமானார்.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads