தெகிர்தா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெகிர்தா மாகாணம் (Tekirdağ Province, துருக்கியம்: Tekirdağ ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும் . இது நாட்டின் கிழக்கு திரேசு பகுதியில் அமைந்துள்ளது. இது ஐரோப்பிய துருக்கி என்றும் அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ளள மூன்று துருக்கிய மாகாணங்களில் இதுவும் ஒன்றாகும். தெகிர்ததா மாகாணத்தின் எல்லைகளாக கிழக்கே இஸ்தான்புல் மாகாணம், வடக்கே கோர்க்லாரெலி மாகாணம், மேற்கே எடிர்னே மாகாணம் மேற்கே காலிபோலி தீபகற்பத்தின் கனக்கலே மாகாணம் போன்றவை அமைந்துள்ளன.
மகாணத்தின் தலைநகராக டெகிர்தாஸ் நகரம் உள்ளது. இந்த நகரானது இஸ்தான்புல்லைத் தவிர்த்து ஐரோப்பிய துருக்கியின் மிகப்பெரிய நகரம் ஆகும்.
Remove ads
வேளாண்மை
இந்த மாகாணமானது துருக்கி நாட்டின் திராட்சை சாகுபடி மற்றும் ஒயின் தயாரிப்பு போன்றவற்றில் மிக முக்கியமான பிராந்தியங்களில் ஒன்றாகும். டெக்கிர்தா மற்றும் ஆர்க்கி இடையேயான கடற்கரை பகுதிகள், குறிப்பாக மெரெஃப்டேவானது திராட்சைத் தொட்டங்களின் குறிப்பிடத்தக்க மையம் ஆகும். சார்க்கியின் 27 கிராமங்களில் திராட்சை பயிரிட்டு மதுவை உற்பத்தி செய்கின்றன. இப்பகுதியில் நன்கு அறியப்பட்ட மது உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் "டோலுகா", "கோலர்", "குட்மேன்", "பாஸ்கே", "லத்தீஃப் அரால்" ஆகிய நிறுவனங்கள் அடங்கும். இப்பகுதியின் பிற மது உற்பத்தியாளர்களாக ஹோஸ்கியில் " மெலன் ", சார்க்கி, டெக்கிர்டாயில் " உமுர்பே " ஆகியவை உள்ளனர்.

Remove ads
மாவட்டங்கள்
- செர்கிஸ்கோயே
- கொர்லு
- எர்கீன்
- ஹயரபோலு
- கபக்லே
- மல்காரா
- மர்மாரா எரேலிசி
- முரட்லே
- சரே
- ஸ்லேமன்பாசா
- சர்கோய்
- தெக்கிர்திக்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads