தெகுரான் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

தெகுரான் மாகாணம்
Remove ads

தெகுரான் மாகாணம் (Tehran Province (பாரசீக மொழி: استان تهران‎ Ostān-e Tehrān) என்பது ஈரானின் 31 மாகாணங்களில் ஒன்றாகும். இது 18,909 சதுர கிலோமீட்டர்கள் (7,301 sq mi) பரப்பளவில், ஈரானின் மத்திய பீடபூமியின் வடக்கே அமைந்துள்ளது.

2014 சூன் 22, அன்று ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சி நோக்கங்களுக்காக ஈரானின் மாகாணங்கள் ஐந்து பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டன. அதன் பின்னர், இந்த மாகாணமானது அதன் தலைநகரான தெகுரானில் அமைந்துள்ள அதன் செயலகத்துடன் முதல் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

தெஹ்ரான் மாகாணத்தின் எல்லைகளாக வடக்கில் மாசாந்தரான் மாகாணம், தெற்கில் கொம் மாகாணம், கிழக்கில் செம்மனன் மாகாணம் மற்றும் மேற்கில் அல்போர்ஸ் மாகாணம் போன்றவை உள்ளன. தெகுரான் பெருநகரமானது மாகாணத்தின் தலைநகராக உள்ளது. இந்த மாகாணமானத்தில் 2005 சூன் நிலவரப்படி, 13 நகரங்கள், 43 நகராட்சிகள் மற்றும் 1358 ஊர்கள் உள்ளன.

தெகுரான் மாகாணம் ஈரானின் பணக்கார மாகாணமாகும், ஏனெனில் இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 29% பங்களிக்கிறது. மேலும், இது நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 18% ஐ கொண்டுள்ளது. தெகுரான் மாகாணம் ஈரானில் மிகுதியாக தொழில்மயமாக்கப்பட்ட மாகாணமாக உள்ளது. அதன் மக்கள் தொகையில் 86.5% நகர்ப்புறங்களிலும், 13.5% மக்கள் கிராமப்புறங்களிலும் வசிக்கின்றனர்.

1778 இல் குவஜர் வம்சத்தால் தெஹ்ரான் நகரம் தலைநகராக அறிவிக்கப்பட்டபோது இந்த மாகாணம் முக்கியத்துவம் பெற்றது. தற்சமயம் தெகுரான் நகரமானது, எட்டு மில்லியன் மக்கள்தொகை கொண்டு, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 40 பெருநகரங்களில் ஒன்றாக உள்ளது .

Thumb
தெஹ்ரான் மாகாண வரைபடம்
Remove ads

நிலவியல்

தெகுரான் மாகாணத்தில் 12 மில்லியனுக்கும் மிகுதியான மக்கள் வசிக்கின்றனர். மேலும் இது ஈரானின் மிகுந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதியாக உள்ளது. இங்கு ஏறத்தாழ 86.5 சதவீதம் பேர் நகர்ப்புறங்களிலும், 13.5 சதவீதம் மாகாண மக்கள் கிராமப்புறங்களிலும் வசிக்கின்றனர்.[1]

Thumb
1778 முதல் தெஹ்ரான் ஈரானின் தலைநகராக உள்ளது.

இந்த மாகாணத்தில் பாயும் மிகப்பெரிய ஆறுகளாக கராஜ் ஆறு மற்றும் ஜஜ்ரூத் ஆறு ஆகிய ஆறுகள் ஆகும்.

இந்த மாகாணத்தின் வடக்கில் அல்போர்சு மலைத்தொடர் போன்ற மலைத்தொடர்கள் பரந்துள்ளன. சவத் கூ மற்றும் ஃபிரூஸ் கூஹ் ஆகிய மலைகள் வடகிழக்கில் அமைந்துள்ளன. லாவாசநாத், காரா தாக், ஷெமிரனாத், ஹசன் அபாத் மற்றும் நாமக் மலைகள் தெற்குப் பகுதிகளில் உள்ளன. பிபி ஷார் பானூ மற்றும் அல்காத்ர் ஆகியன தென்கிழக்கில் அமைந்துள்ளன. மேலும் கஸ்ர்-இ-ஃபிரூஜேயின் சிகரங்கள் மாகாணத்தின் கிழக்கே அமைந்துள்ளன.

சுற்றுச்சூழல் ரீதியாக, தெஹ்ரான் மாகாணத்தின் தென் பகுதிகளில் காலநிலை வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கிறது, ஆனால் மலைப்பகுதியில் குளிர் மற்றும் அரை ஈரப்பதம் கொண்டதாக உள்ளது. மேலும் உயர்ந்த மலைப் பகுதிகளில் நீண்ட குளிர்காலத்துடன் குளிர்மிக்கதாக உள்ளன. ஆண்டின் வெப்பமான மாதங்களாக சூலை நடுப்பகுதியிலிருந்து செப்டம்பர் நடுப்பகுதி வரை உள்ளது. அச்சமயம் வெப்பநிலையானது 28 °C (82 °F) முதல் 30 °C (86 °F) வரையும், குளிர்மிக்க மாதங்களான திசம்பர் முதல் சனவரிவரை 1 °C (34 °F) வெப்பம் நிலவுகிறது. ஆனால் குளிர்காலத்தில் சில நேரங்களில் இது −15 °C (5 °F) வரை கூட செல்கிறது. தெகுரான் நகரில் மிதமான குளிர்காலம் மற்றும் வெப்பமான கோடை காலம் உள்ளது. சராசரி ஆண்டு மழையளவு சுமார் 200 மில்லிமீட்டர்கள் (7.9 அங்), குளிர்காலத்தில் அதிகபட்சம் மழை பொழிகிறது. மொத்தத்தில், மாகாணத்தில் அரை வறண்ட, தெற்கில் ஸ்டெப்பி புல்வெளி காலநிலை மற்றும் வடக்கில் அல்பைன் தட்பவெப்பம் நிலவுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads