குவாஜர் வம்சம்

துருக்கியப் பூர்வீகத்தைக் கொண்டிருந்த ஈரானிய அரசமரபு (1789-1925) From Wikipedia, the free encyclopedia

குவாஜர் வம்சம்
Remove ads

குவாஜர் வம்சம் (Qajar dynasty) (listen; Persian: سلسله قاجار Selsele-ye Qājār; அசர்பைஜான்: قاجارلر Qacarlar) கிபி 1794 முதல் 1925 முடிய ஈரானை ஆண்ட சியா இசுலாமிய அரச மரபாகும்.[2]

விரைவான உண்மைகள் பாரசீகத்தின் பரந்த பேரரசுدولت علیّه ایرانDolate Eliyye Iran, நிலை ...

துருக்கிய வழித்தோன்றல்களான பழங்குடி இன [3][4][5][6][7][8] குவாஜர் வம்சத்தினர் ஆண்ட நிலப்பரப்புகளை பாரசீகத்தின் பரந்த பேரரசு என்பர் (Persian: دولت علیّه ایران Dowlat-e Aliyye Iran).

ஈரானை ஆண்ட சண்டு வம்சத்தின் இறுதி மன்னரான லோட்டப் அலி கானை பதவி நீக்கிய குவாஜர் வம்சத்தினர், 1794ல் ஈரானை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 1796-இல் குவாஜர் வம்சத்தின் முதல் மன்னர் முகமது கான் குவாஜர், வடகிழக்கு ஈரானின் மஷாத் நகரைக் கைப்பற்றி, [9] ஈரானின் அப்சரித்து வம்சத்தின் ஆட்சியை முடிவு கட்டினார்.[10]

குவாஜர் வம்சத்தினர் உருசியாவுடன் நடத்தியப் போரில் காக்கேசியா பகுதிகளான ஜார்ஜியா, அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா உள்ளிட்ட பல பகுதிகளை உருசியப் பேரரசிடம் இழந்தது. [11] [12]

Remove ads

காக்கேசியப் பகுதிகளை மீண்டும் கைப்பற்றுதல்

உருசியப் பேரரசின் இராணுவப் பாதுகாப்பு பெற்ற ஜார்ஜியா போன்ற காக்கேசியா பகுதிகளை குவாஜர் வம்சத்தினர் மீண்டும் கைப்பற்றினார்.

உருசியாவுடனான போரில் இழந்த பகுதிகள்

12 செப்டம்பர் 1801ல் குவாஜர் வம்ச மன்னர் ஆகா முகமது கான் குவாஜர் இறந்த நான்கு ஆண்டுகள் கழித்து, உருசியப் பேரரசு, கிழக்கு ஜார்ஜியப் பகுதிகளை தன்னில் இணைத்துக் கொண்டது.[13][14] 1804ல் நடைபெற்ற கஞ்சாப் போரில் ருசியாப் பேரரசு பாரசீகத்தின் கஞ்சா நகரத்தை, உருசியர்கள் முற்றிலும் அழித்தனர்.[15] இதனால் 1804 – 1813-களில் உருசியப் - பாரசீகப் போர் நடைபெற்றது.[16] பதே அலி ஷா தலைமையில் (ஆட்சிக் காலம்|r]. 1797-1834) குவாஜர்கள், பாரசீகத்தின் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றியிருந்த உருசியப் பேரரசின் மீது போர் தொடுத்தனர்.[17]

இப்போர்க் காலமானது பாரசீகத்தின் பொருளாதாரம் மற்றும் இராணுவ உத்திகள் மீது உருசியப் பேரரசின் ஆதிக்கம் வெளிப்படுத்தியது. இப்போரில் குவாஜர் இராணுவம் பெரும் தோல்வியை சந்தித்தது. 1813ல் உருசியாவுடன் செய்து கொண்ட குலிஸ்தான் போர் நிறுத்த உடன்படிக்கையின் படி, பாரசீகம் காக்கேசியாவின் தற்கால ஜார்ஜியா, அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா போன்ற பல பகுதிகளை உருசியாவிற்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று.[12]

பத்தாண்டுகள் கழித்து குலிஸ்தான் உடன்படிக்கையை மீறி உருசியப் படைகள் ஈரானின் எரிவான் ஆளுநரகத்தை கைப்பற்றினர்.[18][19] இதனால் 1826 - 1828ல் மீண்டும் பாரசீக - உருசியப் போர் மூண்டது. இப்போர் பாரசீக குவாஜர்களுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. 1828ல் உருசியா - ஈரான் செய்து கொண்ட துருக்மென்சாய் உடன்படிக்கையின் படி, தெற்கு காக்கேசியாவின் தற்கால ஆர்மீனியா, அசர்பைஜான் போன்ற பகுதிகள் முழுவதும், உருசியாவிற்கே உரியது என பாரசீகத்தின் குவாஜர்கள் ஏற்றுக்கொண்டனர்.[12] ஒப்பந்தப்படி உருசியாவிற்கும் -பாரசீகத்திற்கு இடையே புது எல்லையாக, ஆரஸ் ஆறு அமைந்தது. இந்த இரண்டு ஒப்பந்தங்களால் ஈரான் தனது காக்கேசியா நிலப்பரப்புகளை உருசியாவிடம் இழந்தது.[11]

காக்கேசிய முஸ்லீம்கள் புலம்பெயர்தல்

இரு உருசிய-பாரசீக ஒப்பந்தங்களின் படி, உருசியாவிடம் இழந்த தெற்கு காக்கேசியப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லீம் பாரசீக இனக் குழுக்கள், பாரசீகத்தின் மையப் பகுதிகளில் புலம்பெயர்ந்ந்தனர். [20]

Remove ads

குவாஜர்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி

பாரசீக குவாஜர் அரச மரபின் மன்னர் நசீர் அல்-தீன் ஷா ஆட்சிக் காலத்தில் மேற்கத்திய அறிவியல், தொழில்நுட்பம், கல்வி முறைகளை ஈரானில் அறிமுகப்படுத்தினார். 1856ல் நடைபெற்ற ஆங்கிலேய-பாரசீகப் போரில், ஆங்கிலேயர்கள் பாரசீகத்தின் ஹெராத் நகரத்தைக் கைப்பற்றி ஆப்கானித்தானுடன் இணைத்தனர். மேலும் பாரசீக வளைகுடாவின் பல பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். குவாஜர் வம்ச மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு பல வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தனர்.

குவாஜர் வம்ச மன்னர் அமீர் கபீர், 1851ல் தாரூல் பனூன் எனும் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிறுவினார். இப்பல்கலைக் கழகம் மேற்கத்திய முறையில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. [21]

மன்னர் அமீர் கபீர் உருசியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கல்வி அறிஞர்களைக் கொண்டு, ஈரானில் பன்னாட்டு மொழிகள், நவீன மருத்துவம், சட்டம், புவியியல், வரலாறு, பொருளாதாரம் மற்றும் பொறியல் போன்ற படிப்புகளை ஈரானிய மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆதரவு அளித்தார்.[21]

அரசமைப்புச் சட்ட புரட்சி

சனவரி 1906ல் ஈரானில் அரசமைப்புச் சட்டத்தை இயற்றக் கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அக்டோபர் 1906ல் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. 30 டிசம்பர் 1906ல் மன்னரால் கையொப்பமிடப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மன்னரின் வரம்பற்ற அதிகாரம் குறைக்கபப்ட்டது.

மன்னர் முகமது அலி ஷா (ஆட்சிக் காலம் 1907–1909), உருசியாவின் உதவியுடன் அரசமைப்பு சட்டத்தை முடக்கியும், நாடாளுமன்றத்தை கலைத்தும் ஆனையிட்டார். சூலை 1909ல் முகமது வலி கான் தலைமையிலான அரசமைப்புப் புரட்சிப் படைகள், தெகுரானை நோக்கிச் சென்று, மன்னர் முகமது அலி ஷாவை உருசியாவிற்கு நாடு கடத்தி, அரசமைப்புச் சட்டத்தையும், நாடாளுமன்றத்தையும் மீண்டும் நிலைநாட்டினார்கள். 16 சூலை 1909ல் ஈரானிய நாடாளுமன்றம் முகமது அலி ஷாவின் 11 வயது மகன் அகமது ஷா குவாஜரை ஈரானிய மன்னராக அறிவித்தது.[22] சூலை 1907ல் ஈரானின் வடக்கு பகுதியில் உருசியர்களும், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஆங்கிலேயர்களும் ஆதிக்கம் செலுத்தினர். ஈரானின் நடுப்பகுதி மற்றும் மேற்கு பகுதியை நடுநிலைப் பகுதியாக விட்டு வைத்தனர்.

Remove ads

முதல் உலகப் போரும், அதன் தொடர்பான நிகழ்வுகளும்

முதல் உலகப் போரில் ஈரான் நடுநிலை வகித்தது. இருப்பினும் உதுமானியப் பேரரசு, ஈரானை முற்றுகையிட்டது.

குவாஜர் வம்சத்தின் வீழ்ச்சி

பிப்ரவரி 1921ல் ஈரானியப் படைத்தலைவரான ரேசா ஷா, இராணுவப் புரட்சி மூலம் ஈரானிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார். குவாஜர் வம்சத்தின் இறுதி மன்னரான அகமது ஷாவை நாடு கடத்தியதன் மூலம், ஈரானில் குவாஜர் வம்சத்தின் ஆட்சி முடிவிற்கு வந்தது. ரேசா கான் தன்னை பகலவை வம்சத்தின் முதல் ஈரானிய மன்னராக அறிவித்துக் கொண்டார். பகலவி வம்ச மன்னர்கள், ஈரானை 1925 முதல் 1941 முடிய ஆட்சி செய்தனர்.

பாரசீகத்தின் குவாஜர் வம்ச மன்னர்கள் (1794 –1925)

மேலதிகத் தகவல்கள் பெயர், படம் ...
Remove ads

இதனையும் காண்க

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads