மாசாந்தரான் மாகாணம்

ஈரானின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாசாந்தரான் மாகாணம் (Mazandaran Province, (ஒலிப்பு, Persian: استان مازندران, Ostān-e Māzandarān), என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்று ஆகும். இது காசுப்பியன் கடலின் தெற்கு கடற்கரையிலும், அருகிலுள்ள மத்திய அல்போர்ஸ் மலைத்தொடரிலும், மத்திய-வடக்கு ஈரானில் அமைந்துள்ளது.

மாசாந்தரான் மாகாணம் ஈரானின் மிகவும் மக்கள் அடர்த்தி கொண்ட மாகாணங்களில் ஒன்றாகும். மேலும் இது பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை பெருமளவில் கொண்டுள்ளது.[1] மாகாணத்தின் நான்கு பெரிய மாவட்டங்கள் சாரி, அமோல், நூர் மற்றும் டோனெகாபோன் ஆகியவை ஆகும்.[2] இந்த மாகாணம் 1937 இல் நிறுவப்பட்டது.[3]

இந்த மாகாணமானது சமவெளிகள், புல்வெளிகள், காடுகள் மற்றும் மழைக்காடுகள் காஸ்பியன் கடலின் மணல் கடற்கரைகள், கரடுமுரடான மற்றும் பனி மூடிய அல்போர்ஸ் சியராவின் நீண்ட மலைத் தொடர்களில்,[4] ஆசியாவின் மிக உயர்ந்த சிகரங்கள் மற்றும் எரிமலைகளில் ஒன்றான டமாவண்ட் மவுண்ட் உட்பட பல்வேறுபட்ட நிலப் பகுதிகளைக் கொண்டது.[5]

மாசாந்தரான் மாகாணமானது மீன் வளர்ப்புத் தொழிலில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.[6] மற்றும் இந்த மீன்வளர்ப்பு பண்ணைத் தொழிலில் இந்த மாகாணம் பாரம்பரியமாக கொண்டுள்ள ஆதிக்கமானது இப்பகுதிக்கு கூடுதலான பொருளாதார முக்கியத்துவத்தை வழங்குகிறது. மேலும் மாகாணப் பொருளாதாரத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக சுற்றுலாத்துறை உள்ளது, ஏனெனில் ஈரான் முழுவதிலுமுள்ள மக்கள் இப்பகுதிக்கு வருகை தருகிறார்கள். மாசாந்தரான் மாகாணமானது உயிரி தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரும் மையமாக உள்ளது.[1]

Remove ads

நிர்வாக பிரிவுகள்

இந்த மாகாணம் 23,842   கி.மீ. 2 பரப்பளவைக் கொண்டுள்ளது.[7] இந்த மாகாணத்தின் தலைநகராக சாரி நகரம் உள்ளது.

இந்த மாகாணம் 20 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது ( பாரசீக மொழியில் ஷாஹ்ரஸ்தான் ). அனைத்து ஷாஹ்ரஸ்தான்களும் சவடக்ஹ் தவிர, தங்கள் நிர்வாக மையங்களின் பெயரிலினாலேயே அழைக்கப்படுகின்றன.

வரலாறு

இப்பகுதியில் மனிதர்கள் குறைந்தது 75,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்துவருகின்றனர்.[8] ரோஸ்டாம்கோலாவில் உள்ள கோஹர் டேப்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் இந்த பகுதி 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக நகரமயமாக்கப்பட்டதற்கான சான்றுகளை வழங்கியது. மேலும் இப்பகுதி ஈரானின் மிக முக்கியமான வரலாற்று தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[9] பிராந்தியத்தின் இந்த கலாச்சார அம்சம் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.[10] குறிப்பிடத்தக்க நாடோடி பாரம்பரியம் இல்லாத மிகப் பழமையான மக்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக மாசாந்தரான் மாகாணப் பகுதி உள்ளது. இதனால் கலாச்சார ரீதியாக பிராந்தியமானது அதிகமான இடப்பெயற்சி இல்லாத பூர்வ குடிமக்களைக் கொண்ட பகுதியாக உள்ளது.[11] இப்பகுதியின் பழங்குடி மக்களில் மாசாந்தரானிய இனமும் அடங்கும், இம்மக்கள் பேசும் ஈரானிய மொழியானது கிலாக்கி மொழி மற்றும் சங்கிசேரி மொழியை மிகவும் ஒத்திருக்கிறது. ஆனால் பல காகசியன் மொழிகளுடன் பலுக்கலில் வழக்கமான ஒற்றுமைகள் கொண்டுள்ளன. இது பிராந்தியத்தின் வரலாற்றையும் அதன் மக்களையும் பிரதிபலிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ரெசா ஷா ஏழு புதிய சாலைகள் மற்றும் தொடருந்து பாதைகள் அமைப்பதன் மூலம் வடக்கு எல்போர்ஸை தெற்கு சரிவுகளுடன் இணைத்தார். மாசாந்தரான் மற்றும் கிலான் மாகாணங்கள் அனைத்து ஈரானியர்களாலும் ஷோமல் என்று அறியப்பட்டன ( பாரசீக மொழியில் மொழியில் "வடக்கு" என்று பொருள்). மாசாந்தரான் ஈரானின் வடக்கே காஸ்பியன் கடலை ஒட்டி உள்ள ஒரு மாகாணம் ஆகும்.[12] காஸ்பியன் கடலின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள இது ரஷ்யா (கடல் முழுவதும்), கோலெஸ்தான், செம்னான், தெஹ்ரான், அல்போர்ஸ், காஸ்வின் மற்றும் கிலான் மாகாணங்களால் கடிகார சுற்றில் சூழ்ந்துள்ளது. மாகாணத்தின் மிகப்பெரிய நகரமாகவும் சாரி மாகாணத்தின் தலைநகரமாகவும் சாரி நகரம் உள்ளது.

ஜூன் 22, 2014 அன்று மேம்பாட்டு நோக்கங்களுக்காக மாகாணங்களை ஐந்து பிராந்தியங்களாகப் பிரித்ததன் பின்னர் மாசாந்தரான் மாகாணம் முதல் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads