தென்கிழக்கு தில்லி மாவட்டம்
தில்லியில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்கிழக்கு தில்லி மாவட்டம் (South east Delhi) வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும். [1] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் டிபென்ஸ் காலனி ஆகும். இம்மாவட்டம் 11 செப்டம்பர் 2012 அன்று புதிதாக துவக்கப்பட்டது.
வரலாறு
ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் 11 செப்டம்பர் 2012 அன்று புதிதாக தென்கிழக்கு தில்லி மாவட்டம் மற்றும் சதாரா மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது. [2][3]
அமைவிடம்
தென்கிழக்கு தில்லி மாவட்டத்தின் வடக்கில் புது தில்லி மாவட்டம், கிழக்கில் உத்தரப் பிரதேசம், மேற்கில் தெற்கு தில்லி மாவட்டம், தெற்கில் அரியானா மாநிலம் எல்லைகளாக உள்ளது. [4]
மாவட்ட நிர்வாகம்
தென்கிழக்கு தில்லி மாவட்டம் டிபன்ஸ் காலணி, கல்காஜி மற்றும் சரிதா விகார் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது. [5]
முக்கிய குடியிருப்பு பகுதிகள்
டிபன்ஸ் காலணி வருவாய் வட்டம்
- நியு பிரண்ட்ஸ் காலணி
- லஜ்பத் நகர்
- லோடி காலணி
- நிஜாமுத்தீன்
- டிபன்ஸ் காலணி
- சன்லைட் காலணி
- அமர் காலணி
- ஜாமியா நகர்
கல்காஜி வருவாய் வட்டம்
- சங்கம் விகார்
- கோவிந்த் புரி
- ஒக்லா தொழிற்பேட்டை
- கல்காஜி
- புல் பேஹ்லத்பூர்
- சித்தரஞ்சன் தாஸ் பார்க்
சரிதா விகார் வருவாய் வட்டம்
- சரிதா விகார்
- ஜெயித்பூர்
- பதர்பூர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads