தென்னிந்தியத் திரைப்படத்துறை

From Wikipedia, the free encyclopedia

தென்னிந்தியத் திரைப்படத்துறை
Remove ads

தென்னிந்தியத் திரைப்படத்துறை (Cinema of south India) என்பது ஐந்து வெவ்வேறு திரைப்படத்துறைகள் ஒன்று சேர்ந்த கூட்டமைப்பாகும். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் துளு ஆகிய திரைப்படத் தொழில் நிறுவனங்களை ஒன்றிணைத்தது. சென்னை, பெங்களூரு, கொச்சி, ஐதராபாத்து மற்றும் மங்களூர் போன்ற நகரங்களை போன்ற நகரங்களை தலைமை இடங்களாக கொண்டு இயக்குகின்றன.

தென்னிந்திய சினிமா துவக்கத்தில் சுயமாக வளர்ச்சியடைந்தது. மேலும் தென்னிந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் பிற மொழிப்படங்களில் வேலை பார்க்கும் வாய்ப்பு, வியாபாரா ரீதியிலான வெற்றி , உலகமயமாக்கல் போன்ற காரணங்களினால் தென்னிந்திய சினிமா வளர்ச்சி பெற்றது..[1] இதனை தென்னிந்திய திரைப்பட சம்மேளன வர்த்தக நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறையின் வருவாய் 36% ஆகும்.[2]

Thumb
Remove ads

வரலாறு

சென்னை மாகாணத்தின் ஆரம்பகால தொடக்கங்கள்

Thumb
சென்னையில் ஏ.வி.எம் . ஸ்டுடியோஸ், இந்தியாவின் பழமையான எஞ்சியிருக்கும் ஸ்டூடியோ
Thumb
எல்.எம் . ரெட்டி [3] இயக்கிய முதல் தெலுங்கு மற்றும் முதல் தென்னிந்திய டாக்கி திரைப்படம் பக்த பிரஹலாதா

1897இல் ஐரோப்பியர் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற மௌன குறும்படத்தைத் (ஊமைப்படம்) தயாரித்து சென்னையில் வெளியிட்டார்.[4] திரைப்படங்களில் கற்பனையற்ற கதாபாத்திரங்கள் இடம் பெற்றன. தினசரி நிகழ்வில் காணப்படும் புகைப்படப் பதிவுகளாக இருந்தன. மெட்ராஸ் (இன்றைய சென்னை) இல் ஊமைப்படங்களை திரையிடுவதற்காக எலக்ட்ரிக் தியேட்டர் நிறுவப்பட்டது. இது பிரிட்டன் சமூகத்தினருக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. இது சில ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் அண்ணாசாலை (மவுண்ட் ரோடு) தபால் நிலையத்தின் ஒரு பகுதியாக உள்ளது. மவுண்ட் ரோடில் லிரிக் தியேட்டர் என்ற ஒன்றும் இருந்தது. இந்த இடத்தில் ஆங்கில மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள், பால்ரூம் நடனங்கள், ஊமைப்படங்கள் போன்றவை வெளியிடப்பட்டன. திருச்சியில் தென்னிந்திய இரயில்வேயின் ஊழியரான சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர், பிரெஞ்சுகாரரான டூ பாண்ட் இடம் இருந்து ஊமைப்படங்களை விலைக்கு வாங்கி ஒரு வணிக நிறுவனத்தில் காட்சிப்படுத்தினார்.[5] அவர் படங்களை வெளியிடுவதற்கான கூடாரங்களை(டென்ட்) அமைத்தார்.அவரது டென்ட் சினிமா மாநிலம் முழுவதும் பயணித்தது.[6] எனவே மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. பிற்பாடு, அவர் டாக்கிஸ்களைத் தயாரித்தார்.[7]

சாமிக்கண்ணு வின்சென்ட் கோயம்புத்தூரில் தென்னிந்தியாவின் முதல் சினிமாவை உருவாக்கினார். இவர் டென்ட் சினிமா என்ற முறையை உருவாக்கினார். சேலம் (மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ) மற்றும் கோயம்புத்தூரில் (மத்திய ஸ்டூடியோ, நெப்டியூன் மற்றும் பக்ஷிராஜா) போன்ற திரைப்பட ஸ்டூடியோக்கள் கட்டப்பட்டன. சென்னையில் விஜய வாஹினி ஸ்டுடியோ மற்றும் ஜெமினி ஸ்டுடியோஸ் கட்டப்பட்டன. தென்னிந்திய மொழிகள் திரைப்படத்தின் மையமாக சென்னை விளங்கியது.

முதல் தென்னிந்திய திரைப்படங்கள்

இந்திய திரைப்பட கம்பெனி லிமிட்டை நிறுவிய ஆர். நடராஜா அவர்களால் தயாரிக்கப்பட்ட கீசக வதம் (கீசகனின் அழிவு) என்பதே சென்னையின் முதலில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும்.[8]

Remove ads

திரைப்படத்துறைகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads