தெராய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெராய் (Terai, நேபாளம்: तराई) நிலப்பரப்பானது புல்வெளிப் பகுதிகளும் , காடுகளும் கொண்ட இமயமலை அடிவாரப் பகுதி ஆகும். இந்நிலப்பரப்பு இமயமலையின் தென் பகுதியிலும் சிவாலிக் மலை அடிவாரத்திலும் பரவியுள்ளது.

வட இந்தியாவில் தெராய் பகுதியானது கங்கை பிரம்மபுத்திரா பகுதிகளிலும் கிழக்கே யமுனை நதி வரையிலும் பரவியுள்ளது. இது இமாச்சலப் பிரதேசம், அரியானா, உத்தராகண்டம், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது. மேலும் இது மேற்கு வங்காளம், நேபாளத்தின் தெற்கு பகுதிகள், வங்காளதேசம், பூட்டான் மற்றும் அசாம் வரை காணப்படுகிறது.
இப்பகுதியானது கடல்மட்டத்திலிருந்து 67 முதல் 300 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இவை பொதுவாக 8 முதல் 12 கிலோமீட்டர்கள் அகலத்தில் நெடுகப் பரவியுள்ள நிலப்பரப்பு ஆகும்.[1][2]
தெராய் எனும் சொல்லுக்கு இந்தி மொழியில் மலையடிவாரம் (foot-hill) என்று பொருள். நேபாளி மொழியில் கீழே விரிந்த நிலம் (low-lying land) எனும் அதே பொருள் கொள்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads