தெற்கத்திய ஐக்கிய அமெரிக்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெற்கத்திய ஐக்கிய அமெரிக்கா, (Southern United States) அல்லது தெற்கு அமெரிக்கா, டிக்சி, டிக்சிலாந்து அல்லது தி சவுத், எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் ஓர் வட்டாரம் ஆகும்.இந்த வட்டாரம் முழுமையாக ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்சார் தெற்குடன் பொருந்துவதில்லை. ஆனால் பொதுவாக உள்நாட்டுப் போரின் மாநிலங்களின் கூட்டமைப்பிலிருந்த அமெரிக்க மாநிலங்களை உள்ளடக்கும்.[2] மிகுந்த தெற்கு என்று வரையறைக்கப்படுவது தென்கிழக்குப் பகுதியில் முழுமையாக அமைந்துள்ளது. புவியியல்படி தென்பகுதியிலுள்ள அரிசோனாவும் நியூ மெக்சிகோவும் மிகவும் அரிதாகவே தெற்கத்திய மாநிலங்களில் சேர்க்கப்படுகின்றன. ஆனால் 1863இல் வர்ஜீனியாவிலிருந்து பிரிந்த மேற்கு வர்ஜீனியா[3] வழமையாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றது.[4][5][6] சில அறிஞர்கள் மாநிலங்களின் எல்லைகளோடு ஒன்றிணையாத வரையறுப்புக்களை பரிந்துரைத்தனர்.[7][8] டெலவெயர், மேரிலாந்து, மற்றும் வாசிங்டன், டி. சி., அடிமைத்தனத்தை அனுமதித்தாலும் அவர்கள் உள்நாட்டுப் போரின்போது அமெரிக்க ஒன்றியத்துடன் இருந்தவர்கள். 1960களின் மனித உரிமை இயக்கத்திற்குப் பிறகு அவர்கள் பண்பாடு, பொருளியல், மற்றும் அரசியலில் தொழில்வளம் மிகுந்த வடக்கத்திய மாநிலங்களுடன் ஒத்துள்ளனர். இந்த மாநிலங்கள் பெரும்பாலும் நடு-அத்திலாந்திக்கு அல்லது வடகிழக்கு மக்களுடன் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.[9][10][11][12][13] இருப்பினும், ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் இந்த மாநிலங்களை தெற்கில் இணைத்துள்ளது.
பொதுவாக, ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கையும் தெற்கு-நடுவத்தையும் இணைத்தே தெற்கு வரையறுக்கப்படுகின்றது. இப்பகுதி இதன் பண்பாட்டிற்காகவும் வரலாற்றிற்காகவும் அறியப்படுகின்றது; தங்களுக்கான பழக்கவழக்கங்கள், இசைப்பாணிகள், சமையல்முறைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். தெற்கதிய இனப் பாரம்பரியம் பரந்துபட்டு ஐரோப்பிய (பெரும்பாலும் ஆங்கில, இசுக்காட்டிசு, ஐரிய, செருமானிய,பிரான்சிய, எசுப்பானியர்கள்), ஆபிரிக்க, தொல்குடி அமெரிக்கக் கூறுகளைக் கொண்டுள்ளது.[14]
தெற்கின் வரலாற்று, பண்பாட்டு வளர்ச்சியில் அடிமை முறையின் தாக்கம் ஆழமாக உள்ளது. குறிப்பாக மிகுதெற்கிலுள்ளப் பண்ணைகளில் காணப்பட்டதைப் போன்ற அடிமைமுறை அமெரிக்காவின் வேறெந்தப் பகுதியிலும் இல்லை. இங்குள்ள மக்கள்தொகையில் பெரும்பாலராக உள்ள ஆபிரிக்க அமெரிக்கரும் அரசு உரிமைகள் குறித்த கருத்தியலும் உள்நாட்டுப் போர் மற்றும் தொடர்ந்த மீளமைப்பு காலங்களில் பெரிதாக்கப்பட்ட இனவெறுப்பின் பாரம்பரியமும் பள்ளிகளிலும் பொதுவிடங்களிலும் இனவாரி தனிப்படுத்துகை அமைப்பும் ("ஜிம் குரோ சட்டங்கள்"), தேர்தல் வரிகள் மூலம் வாக்களிக்கவும் தேர்தலிலில் நிற்கவும் உரிமைகளைப் பறித்ததும் (1960 வரை) இவற்றின் அடையாளங்களாக உள்ளன. 1960கள் முதல் கருப்பின மக்கள் பல பதவிகளில் இருந்துள்ளனர். குறிப்பாக கடலோர மாநிலங்களான வர்ஜீனியா, தென் கரொலைனாவில் பெருமளவில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பல ஆபிரிக்க அமெரிக்கரும் சார்லட், கொலம்பியா, மெம்பிஸ், ஹியூஸ்டன், அட்லான்டா, நியூ ஓர்லென்ஸ் போன்ற பெருநகரங்களில் மேயர்களாகவும் காவல் அதிகாரிகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க பேராயத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிபுரிந்துள்ளனர்.[15]
காலங்காலமாக, தெற்கு வேளாண்மையை வெகுவாகச் சார்ந்துள்ளது. 1945 வரை மிகவும் ஊரகப்பகுதியாகவே இருந்தது. தற்போது இது தொழில்வளர்ச்சி மிக்க நகரியப் பகுதிகளுடன் பல உள்நாட்டு, வெளிநாட்டுக் குடியேறிகளைக் கவர்ந்துள்ளது. தெற்கு அமெரிக்கா தற்போது ஐக்கிய அமெரிக்காவில் மிக விரைவாக வளர்ந்துவரும் பகுதிகளில் ஒன்றாக விளங்குகின்றது. தெற்கத்திய அமெரிக்காவில் ஹியூஸ்டன் மிகப்பெரிய நகரமாகும்.[16] சமூகவியல் ஆய்வுகளின்படி தெற்கத்திய கூட்டு அடையாளம் மற்ற பகுதிகளிடமிருந்து தனித்த அரசியல், மக்களியல், பண்பாட்டு கூறாகளால் வரையறுக்கப்படுகின்றது. இந்த வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகள் கடுமையான கிறித்தவ சார்பைக் கொண்டுள்ளது; சீர்திருத்தத் திருச்சபை தேவாலயங்களில் வருகைப்பதிவு மிகக் கூடுதலாக உள்ள பகுதியாக விளங்குகின்றது. சமயச் சார்பு அரசியலில் இப்பகுதி முதன்மை வகிக்கிறது. பொதுவாக மற்றவர்களைவிட தெற்கத்தியவர்கள் சமயம், ஒழுக்கம், பன்னாட்டு உறவுகள், இனக்கலப்பு ஆகியவற்றில் பழமைவாதிகளாக உள்ளனர்.[17][18] இதனால் 1960கள் முதல் இவ்வட்டார மாநிலங்கள் பொதுவாக குடியரசுக் கட்சியின் கோட்டையாக விளங்குகின்றன.[18]
வானிலையைத் தவிர தெற்கில் வசிப்பது நாட்டின் பிறபகுதிகளைப் போன்றே இருப்பது கூடுதலாகி வருகிறது. குறிப்பாக கடலோர நகரங்களுக்கும் பெருநகரப்பகுதிகளுக்கும் வடக்கிலிருந்து வந்துள்ள மக்களால்[19] and millions of Hispanics[20] தெற்கத்திய வழமைகளுக்கு மாறான பண்பாடும் சமூக நியமங்களும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளன.[21][22] பார்வையாளர்கள் நோக்கில் தெற்கின் தனித்துவம் மழுங்கி வருகின்றது.[23] இது இருபுறமும் தாக்கத்தை உண்டாக்கி உள்ளது; தெற்கத்திய பண்பாடும் நாட்டின் பிறபகுதிகளுக்கு பரவியுள்ளது.[24]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads