தெற்கு நடு ஐக்கிய அமெரிக்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெற்கு நடு ஐக்கிய அமெரிக்கா (South Central United States) அல்லது தெற்கு நடுவ மாநிலங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு மையப்பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களடங்கியதாகும். இது முந்தைய பழைய தென்மேற்கிலிருந்து பெறப்பட்டது; இதில் தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதிகள் அடங்கியிருந்தன. ஆர்கன்சா, லூசியானா, ஓக்லகோமா, டெக்சஸ் (இவை ஐக்கிய அமெரிக்க வட்டாரங்களின் பட்டியல்படி மேற்கு தெற்கு நடுவ மாநிலங்கள்) மாநிலங்கள் எப்போதும் இதில் உள்ளடங்கிய மாநிலங்களாகும். கணக்கெடுப்பு ஆணையத்தின் கிழக்கு தெற்கு நடுவ மாநிலங்கள் வரையறையில் அலபாமா, மிசிசிப்பி, டென்னிசி, கென்டக்கி ஆகியவையும் உள்ளடங்குகின்றன. மிகக் கூடுதலாக கேன்சஸ், மிசூரி மாநிலங்களும் இதில் சில நேரங்களில் சேர்க்கப்படுகின்றன. பெரும்பாலான மாநிலப் பகுதிகள் நடுவண் நேர வலயத்தில் உள்ளன. அமெரிக்க வரலாற்றின் பல காலங்களில் இவை வெவ்வேறாக வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads