ஆகத்து

மாதம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆகத்து அல்லது ஓகஸ்ட் (August, /ˈɔːɡəst/ (கேட்க) AW-gəst) என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் ஆண்டின் எட்டாவது மாதத்தைக் குறிக்கும். அத்துடன் 31 நாட்களைப் பெற்றுள்ள ஏழு மாதங்களுள் இதுவும் ஒன்றாகும்.[1]

<< ஆகத்து >>
ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
MMXXV

கிமு 753 இல் ரொமூலசின் ஆட்சியில் 10 மாதங்களைக் கொண்ட ரோமானிய நாட்காட்டியில் ஆகத்து மாதம் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள்படும் செக்சுடிலிசு (Sextilis) என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன்பட்டது. மார்ச்சு மாதம் முதலாவது மாதமாகும். கிமு 700 ஆம் ஆண்டளவில் நூமா பொம்பிலியசின் ஆட்சியில், சனவரி, பெப்ரவரி மாதங்கள் மார்ச்சுக்கு முன்னர் கூட்டப்பட்டதை அடுத்து இது எட்டாவது மாதமாகியது. அப்போது இம்மாதத்தில் 29 நாட்களே இருந்தன. கிமு 45 ஆம் ஆண்டில் யூலியசு சீசர் யூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியதில் இருந்து மேலும் 2 நாட்கள் அதிகரிக்கப்பட்டு தற்போதைய 31 நாட்கள் ஆகியது. பின்னர் கி.மு 8ம் நூற்றாண்டில் அலெக்சான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் அகசுடசு சீசரின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக செக்சுடிலிசு என அழைக்கப்பட்டு வந்த இம்மாதத்திற்கு ஆகத்து எனப் பெயரிடப்பட்டது.

காலநிலையின் அடிப்படையில், தெற்கு அரைக்கோளத்தின் ஆகத்து மாதம் வடக்கு அரைக்கோளத்தின் பெப்ரவரி மாதத்திற்கு சமனாகும்.

Remove ads

ஆகத்து மாத சிறப்பு நாட்கள்

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads