தெற்கு சல்மாரா மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

தெற்கு சல்மாரா மாவட்டம்
Remove ads

தெற்கு சல்மாரா மாவட்டம் (South Salmara Mankachar) தெற்கு அசாம் மாநிலத்தில் உள்ள துப்ரி மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 15 ஆகஸ்டு 2015 அன்று நிறுவப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் அட்சிங்கிமாரி ஆகும். கவுகாத்திக்கு கிழக்கே 245 கி.மீ. தொலைவில் அட்சிங்கிமாரி உள்ளது.

விரைவான உண்மைகள் தெற்கு சல்மாரா மாவட்டம், நாடு ...
Remove ads

புவியியல்

980 சதுர கிலோ மீட்டர் (2,500 சதுர மைல்) பரப்பளவு கொண்ட தெற்கு சல்மாரா மாவட்டத்தின் மேற்கில் வங்காளதேசம், தென்கிழக்கில் மேகாலயாவும் எல்லைகளாக உள்ளது.

பொருளாதாரம்

பிரம்மபுத்திரா ஆறு இம்மாவட்டத்தின் கிழக்கிலிருந்து மேற்காக பாய்கிறது. மாவட்டத்தில் ஆன்டின் சராசரி மழைப்பொழிவு 2,916 மில்லி மீட்டர் ஆகும். தெற்கு சல்மாரா மாவட்டத்தின் நெல், கோதுமை, பருப்புகள மற்றும் கரும்பு போன்ற வேளாண்மையும், காட்டுப் பொருட்களும் முதன்மைப் பொருளாதாரம் ஆகும். காடுகளிலிருந்து மூங்கில் விளவிக்கப்படுகிறது. மேலும் பால், மீன், முட்டை, இறைச்சி இம்மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. இம்மாவட்டத்தின் மலைப்பாங்க்கான பகுதிகளில் 1362 ஹெக்டேர் பரப்பில் மூன்று தேயிலைத் தோட்டங்கள் உள்ள்து.

Remove ads

வருவாய் மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் ஒரு ஒரு வருவாய் கோட்டமும், 2 வருவாய் வட்டங்களும் கொண்டது.

  1. தெற்கு சல்மாரா வருவாய் வட்டம்
  2. மன்கச்சர் வருவாய் வட்டம்

அரசியல்

இம்மாவட்டம் மன்கச்சர் மற்றும் சல்மாரா தெற்கு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.[2] துப்ரி மகக்ளவைத் தொகுதியில் இம்மாவட்டம் உள்ள்து.[3]

மக்கள் & பண்பாடு

இம்மாவட்டத்தில் அசாமிய மற்றும் புலம்பெயர்ந்த [[வங்காளதேசம்|வங்காளதேச மக்கள் அதிகம் வாழ்வதால் இரு பண்பாட்டு நாகரிகங்களின் கலவையாக கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த மக்களில் வங்காளதேச முஸ்லீம்கள் 85% ஆகவும், இந்துக்கள் 14% ஆகவும், கிறித்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் 1% ஆகவுள்ளனர். இம்மாவட்டத்தில் வங்காள மொழி பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது.

போக்குவரத்து

நீர்வழிப்போக்குவரத்து

இம்மாவட்டத்தில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றில் படகுப் போக்குவரத்து நடைபெறுகிறது.

சாலைப்போக்குவரத்து

மாநிலச் சாலைகள் சாலைப்போக்குவரத்திறு பயன்பாட்டில் உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads