தெற்கு பாகா கலிபோர்னியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெற்கு பாகா கலிபோர்னியா (பாகா கலிபோர்னியா சுர், Baja California Sur, /ˈbaxa kaliˈfornja sur/ ), அல்லது "கீழுள்ள கலிபோர்னியாவின் தெற்கு", அலுவல்முறையில் கட்டற்றதும் இறையாண்மையுடையதுமான தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலம் (எசுப்பானியம்: Estado Libre y Soberano de Baja California Sur)எனப்படுவது மக்கள்தொகைப்படி மெக்சிக்கோ நாட்டின் இரண்டாவது மிகச் சிறிய மாநிலமாகும். 32 மாநிலங்கள் உள்ள மெக்சிக்கோ நாட்டின் 31வது மாநிலமாக அக்டோபர் 8, 1974இல் இணைந்தது. அதற்கு முன்னதாக இப்பகுதி பாகா கலிபோர்னியாவின் தெற்கு ஆள்புலம் என அழைக்கப்பட்டு வந்தது. பாகா கலிபோர்னியா மூவலந்தீவின் தென்பகுதியில் 73,475 km2 (28,369 sq mi)பரப்பில் அமைந்துள்ள இந்த மாநிலம் மெக்சிக்கோவின் நிலப்பகுதியில் 3.57% ஆக உள்ளது. இதன் வடக்கில் பாகா கலிபோர்னியாவும் மேற்கில் அமைதிப் பெருங்கடலும், கிழக்கில் கலிபோர்னியா வளைகுடாவும் அமைந்துள்ளன. கலிபோர்னியா வளைகுடாக் கடல்கடந்த எல்லைகளை கிழக்கில் சோனோரா மற்றும் சினலோவா மாநிலங்களுடன் கொண்டுள்ளது.
As of 2010[update]கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 637,026 ஆக இருந்தது. இதன் மிகப் பெரிய நகரமும் தலைநகருமாக லா பாஸ் உள்ளது.இது ஓர் சுற்றுலாத் தலமாகவும் வரலாற்றுச் சின்னமாகவும் விளங்குகிறது. இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க லோரெட்டோ நகரம் மூன்று கலிபோர்னியாக்களுக்கும் (தெற்கு பாகா கலிபோர்னியா, பாகா கலிபோர்னியா, மற்றும் கலிபோர்னியா) முதல் தலைநகரமாக இருந்துள்ளது. அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் வடிவமைத்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் உள்ள சான்ட்டா ரோசாலியா நகரமும் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads