தெலாங் ஊசான் மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெலாங்கு ஊசான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Telang Usan; ஆங்கிலம்: Telang Usan District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சிபு பிரிவில்; ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தெலாங்கு ஊசான் நகரம்.[2][3]
இந்த மாவட்டம் பாராம் ஆற்றின் (Baram River) கரையில், ஆற்றின் முகப்பில் இருந்து 100 கி.மீ. உட்பாகத்தில் உள்ளது. தெலாங்கு ஊசான் மாவட்டத்திற்கு பெலாகா மாவட்டம், முலு மாவட்டம், மருடி மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.
Remove ads
இனக்குழுக்கள்
தெலாங்கு ஊசான் மாவட்டம் கென்னியா, காயான், பெனான் எனும் ஒராங் உலு மக்களின் தாயகமாக விளங்குகிறது. பெரும்பாலான கென்னியா மக்கள், தெலாங்கு ஊசான் மாவட்டத்தின் கிராமப் புறங்களில் பரவி உள்ளனர்.
சமூக பொருளாதார நடவடிக்கைகள்
1970-களின் நடுப்பகுதியில் லோங் லாமா (Long Lama) பகுதியில் காட்டு மரங்களை வெட்டும் நடவடிக்கைகள் தொடங்கின. தெலாங்கு ஊசான் மாவட்டத்தில் இருந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. அந்த நடவடிக்கைகள் வருமானத்தையும் உருவாக்கித் தந்தன.
இப்போது அந்த மரம் வெட்டும் செயல்பாடு குறைந்து, செம்பனைத் தோட்டத் திட்டங்களுக்கு (Projek Perladangan Kelapa Sawit) மாற்றப்பட்டு உள்ளது.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads