தேக்கும்பகம்

கேரள சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

தேக்கும்பகம்
Remove ads

தெக்கும்பகம் (Thekkumbhagam) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தின், பரவூர் நகராட்சியின் தெற்கு எல்லை ஊராகும். இது கொல்லத்தின் கடலோரப் பகுதியின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இது அரபிக்கடல் கடற்கரையில் உள்ளது.[1] கொல்லம் - திருவனந்தபுரம் கடலோர எல்லையில் உள்ள தெக்கும்பகம் - கப்பில் கரையோரப் பகுதி மாநிலத்தில் வளர்ந்து வரும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.[2] 1936 இல், உருவாக்கபட்ட, பரவூர் பஞ்சாயத்தின் 9 பிரதேசங்களில் தேக்கும்பகம் ஒன்றாகும்.[3]   பரவூரில் உள்ள இரட்டை முகத்துவாரங்களில் தெக்கும்பகம் முகத்துவாரம் ஒன்றாகும். மற்றொன்று போஷிகாரா முகத்துவாரமாகும்.

விரைவான உண்மைகள் தேக்கும்பகம் Thekkumbhagom, நாடு ...
Remove ads

பராவூர் தெக்கும்பக முகத்துவாரம்

பரவூர் - நிலப்பகுதியானது மூன்று பக்கங்களிலும் நீர் நிலைகளால் சூழப்பட்டுள்ள தீபகற்பமாக உள்ளது. அவை பரவூர் ஏரி, நடயரா ஏரி, அரபிக்கடல் போன்றவை ஆகும். பரவூர் நகரத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் தீபகற்ப கரையோரங்களைக் கொண்டுள்ளன. தெக்கும்பம் முகத்துவாரப் பகுதியானது மாநிலத்தில் அதிக மக்களை ஈர்க்கும் முகத்துவாரமாகும்.  இது கொல்லம் - திருவனந்தபுரம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் உள்ள கடற்கரை நாள்தோறும் மக்கள் கூட்டத்தை ஈர்ப்பதாக உள்ளது.[4][5] பராவூர் - காப்பில் - வர்க்கலை சாலை வழியாக பயணம் செய்வதன் மூலம் இந்த முகத்துவாரத்தை அணுகலாம்.[6]

Remove ads

தேக்கும்பகம் அருகே காணத்தக்க இடங்கள்

கொல்லத்தின் கோயில் நகரமான பரவூர்[7]

  • புத்தன்பள்ளி ஜும்மா மசூதி- தெற்கு கேரளத்தின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்று (750 ஆண்டு பழமையானது)

(தலைமை இமாம்: அல்_உஸ்தாத் மஹ்மூத் பைஸி)

  • வலிய பள்ளி ஜும்மா மசூதி

(தலைமை இமாம்: அல்_உஸ்தாத் அஹ்மத் கபீர் மன்னானி)

  • முஹிய்தீன் மசூதி
  • புடியிடம் மகாதேவர் கோயில்.
  • தெக்கும்பகம்-கப்பில் கடற்கரை மற்றும் கழிமுகம்
  • பிரியதர்ஷினி படகு துறை
  • பரவூர் ஏரி
  • போஷிகாரா தோட்டம்
  • போலாச்சிரா கழனிகள்
  • புத்தேங்குளம் யானை கிராமம் [8]
Remove ads

மேலும் காண்க

படக்காட்சியகம்

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads