தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP) இந்தியாவின், நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சி ஆகும். இக்கட்சியின் தலைவர் சிங்வாங் கோனியாக் என்பவர் ஆவார்.[1] இக்கட்சியின் சின்னம் பூகோளமாகும்.

விரைவான உண்மைகள் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி Facta Non Verba, சுருக்கக்குறி ...

இக்கட்சியானது நாகாலாந்து மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து, நாகாலாந்து முதலமைச்சர் நைபியு ரியோ ஜனநாயக முற்போக்கு கட்சியை உருவாக்கினார்.[2][3] 2017 ஆம் ஆண்டு அக்டோபர் ஜனநாயக முற்போக்கு கட்சி பின், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் பாஜக உடன் கூட்டணி வைத்துக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது.[4] இக்கட்சியானது தற்போது பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது.[5] பின்னர் அதே மாதத்தில், நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி, இக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.[6]

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் தேஜமுக, 2,53,090 வாக்குகளைப் பெற்று 18 இடங்களில் வென்றது. இது 25.20 % வாக்கு வங்கி ஆகும். தேஜமுக பாஜக உடன் சேர்ந்த ஆட்சி அமைத்தது. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் நாள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இறப்பால் 17 இடங்கள் தற்போது உள்ளது.[7] தற்போது இக்கட்சி வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads