நாகாலாந்து மக்கள் முன்னணி

இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

நாகாலாந்து மக்கள் முன்னணி
Remove ads

நாகாலாந்து மக்கள் முன்னணி (Nagaland People's Front) இந்திய மாநிலமான நாகாலாந்தின் ஓர் அரசியல் கட்சியாகும். 2003-2008 காலத்தில் இக்கட்சி மாநில பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிற வட்டாரக் கட்சிகளுடன் "நாகாலாந்து சனநாயகக் கூட்டணி" என்ற கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்தது. நடுவண் அரசால் சனவரி 3, 2008இல் கலைக்கப்பட்ட பின்னர் நடந்த தேர்தல்களில் மீண்டும் வெற்றிபெற்று மார்ச்சு, 2008இல் மீண்டும் ஆட்சியமைத்தது. கட்சித் தலைவராக மருத்துவர் சுரோசெலி (Shürhozelie) உள்ளார்.[4] இக்கட்சியின் நைபியு ரியோ மாநில முதல்வராக இருந்து வருகிறார். மார்ச்சு 22, 2004 அன்று தன்னுடன் நாகாலாந்து சனநாயக கட்சியை இணைத்துக் கொண்டது. தற்போது இக்கட்சி வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.

விரைவான உண்மைகள் நாகா மக்கள் முன்னணி, சுருக்கக்குறி ...

மாநில அளவில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் நடுவண் அரசில் தேசிய சனநாயக கூட்டணியுடனோ ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனோ இணைந்திருக்கவில்லை.[5] இந்த கட்சியில் இருந்து மக்களவையில் ஓர் உறுப்பினர் உள்ளார்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads