தேசிய கீதம் (திரைப்படம்)

சேரன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய கீதம் (Desiya Geetham) என்பது 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியில் வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும்.[1] சேரன் இயக்கிய இப்படத்தை ஆர். சந்துரு, அபுதாஹிர், சதீஷ்குமார், ஜி. வி. சுரேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இப்பபடம் வெளியீட்டின் போது சர்ச்சைகளை உருவாக்கியது [2][3] என்றாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[4][5] இந்த படம் 1998 தீபாவளி அன்று வெளியான படங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் தேசிய கீதம், இயக்கம் ...
Remove ads

கதை

இந்த படம் ஒரு முதலமைச்சரையும் அவரது குடும்பத்தினரையும் கடத்தி ஒரு தொலைதூர கிராமத்திற்கு அழைத்துச் செல்வது பற்றியது. தமிழ்நாட்டில் அரசியல் அமைப்பை சரிசெய்ய புரட்சிகர வழிகளைத் தேடும் கிராமவாசி வேடத்தில் முரளி நடித்துள்ளார். நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே கதையின் அடிப்படை ஆகும்.

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்ததார்.[6][7] பாடல் வரிகளை அறிவுமதி, பழனி பாரதி, வாசன் ஆகியோர் எழுதினர். பாடல்கள் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன.[8]

வணிகம்

  • இந்த படம் திரையரங்குகளில், 200,000 அமெரிக்க டாலர் மதிப்புக்கு வசூலை ஈட்டியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads