நளினிகாந்த்

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நளினிகாந்த் (Nalinikanth) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தற்காக அறியப்படுகிறார். 1980 ஆம் ஆண்டு காதல் காதல் காதல் திரைப்படத்தில் அறிமுகமான இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நளினிகாந்த் ஒரு காலத்தில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தார். இவரது தோற்றம் ரஜினிகாந்தை ஒத்திருக்கிறது. இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி, மங்கம்மா சபதம், ருத்ரா, புதுபட்டி பொன்னுதாயி, எங்க முதலாளி, ராஜா எங்க ராஜா, யாமிருக்க பயமே போன்றவை ஆகும்.[1]

விரைவான உண்மைகள் நளினிகாந்த், பிறப்பு ...
Remove ads

திரைப்பட வாழ்க்கை

இயக்குநர் தசரி நாராயண ராவால் தெலுங்கு திரைப்பத்தில் நளினிகாந்தை அறிமுகப்படுத்தினார். இவரது முதல் படம் ரங்கூன் ரவுடி 1979 இல் வெளியிடப்பட்டது. அழைத்தால் வருவான், இதயம் பேசுகிறது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கில் இவர் 35 படங்கள் நடித்துள்ளார். பாக்யராஜ் படங்களில் இவருக்கு சில குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் வழங்கப்பட்டன. சிவாஜியின் சத்யம் படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். இது 100 நாட்கள் ஓடியது. என். டி. ராமராவ், நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி போன்ற தெலுங்கின் முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் எதிர்மறை பாத்திரங்களில் நடித்துள்ளார்.[2][3]

Remove ads

தொலைக்காட்சிகளில்

திரைப்படங்களில் நடிப்பது இவரது வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர உதவாததால், தொலைக் காட்சித் தொடர்களைத் தயாரிப்பதாக தனது பாதையை மாற்றிக்கொண்டார். சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜெமினி தொலைக்காட்சி, மா தொலைக்காட்சி பல தமிழ் மற்றும் தெலுங்கு தொடர்களைத் தயாரித்தார்.[4]

  • காற்றுக்கென்ன வேலி ( விஜய் தொலைக்காட்சி ), வரதராஜனாக (வெண்ணிலாவின் தந்தை)
  • மர்மதேசம் (ரகசியம்), அண்ணாமலையாக

திரைப்படவியல்

இது ஒரு பகுதி திரைப்படவியலாகும் நீங்கள் இதை விரிவாக்கலாம்.

1970 கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

1980 கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

1990 கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

2000 கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

2010 கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

2020 கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads