தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் ('National Institute of Virology - NIV ) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாநகரத்தில் அமைந்துள்ள்து. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் ஒரு பகுதியாக இந்நிறுவனம் 1952 முதல் செயல்படுகிறது.[1] இந்நிறுவனம் துவக்கத்தில் ராக்பெல்லர் அறக்கட்டளையுடன் இணைந்து இயங்கிய போது இதன் பழைய பெயர் 'வைரஸ் ஆய்வு மையம் ('Virus Research Center') என்பதாகும். தற்போது உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இயங்கும், இந்த தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்திற்கு, உலக சுகாதார நிறுவனம் H5 தகுதி வழங்கியுள்ளது.[2]

இந்நிறுவனம் வைரஸ் கிருமிகளை ஆய்வு செய்வதுடன், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளையும், விளைவுகளையும் கண்டறிவதுடன், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளையும் ஆய்வு செய்து கண்டுபிடிப்பதில் முனைப்புடன் உள்ள்து.[3] 1978-இல் இதன் பெயர் தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]
மேலும் இந்த ஆய்வு நிறுவனம் இன்ஃப்ளூயன்ஸா (குளிர் காய்ச்சல்), சிறுமூளை அழற்சி (ஜப்பானிய என்செபாலிடிஸ்), ரோட்டா வைரசு, தட்டம்மை, மஞ்சள் காமாலை மற்றும் கொரானா வைரஸ் ஆகியவற்றிற்றிகான தேசிய கண்காணிப்பு மையமாகவும் செயல்படுகிறது.
மேலும் இந்த ஆய்வு நிறுவவனம் புனே பல்கலைக்கழகம் வாயிலாக வைரஸ் கிருமிகள் படிப்புகளில் முதுநிலை அறிவியல் பட்டப் படிப்பும், முனைவர் படிப்பும் வழங்குகிறது.
Remove ads
துறைகள்
இவ்வாராய்ச்சி மையம் சுவாசச் செல்கள், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி, ரிக்கெட்ஸியா, மஞ்சள் காமாலை, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் வைரஸ்கள் தொடர்பான கிளினிக்கல் தீநுண்மியியல், உயிர்வேதியில், வைரஸ் பதிவுகள் மற்றும் உயிர் அளவையியல் போன்றவைகளில் ஆய்வுப் படிப்புகள் கொண்டுள்ள்து. இந்திய அறிவியல் ஆலோசனைக் குழுவின் (Scientific Advisory Committee (SAC) ஒன்றிப்புடன் இம்மையம் தனது ஆய்வுப் பணிகள் மேற்கொள்கிறது
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads