தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் (Indian Rivers Inter-link) என்பது இந்தியாவிற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் ஓர் அரசுத் திட்டம் ஆகும். இதன் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை நாட்டின் மற்ற வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடும் திட்டமாகும்.

வரலாறு

இந்திய அரசின் நீர்வள அமைச்சகம்த்தின் கீழ் செயல்படும் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் (அ) தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை (National Water Development Agency) இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து வருகிறது.

கடந்த 1972 ஆம் ஆண்டு மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த டாக்டர். கே.எல்.ராவின் சீரிய ஆய்வின்பேரில் முதன் முதலாக கங்கை காவிரி இணைப்புத் திட்டம் முன் வைக்கப்பட்டது.

Remove ads

கங்கை - காவிரி இணைப்புத் திட்டம்

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன[1].

இமாலய ஆறுகளை இணைக்கும் திட்டம்

இமயமலையிலிருந்து பாயும் ஆறுகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகியவற்றை இணைப்பது, கிழக்கு நோக்கிப் பாயும் கங்கை நதியை மகாநதி ஆறுடன் இணைப்பது.

தீபகற்ப ஆறுகளை இணைக்கும் திட்டம்

தீபகற்ப இந்தியாவில் உள்ள மகாநதி ஆறு மற்றும் கோதாவரி ஆறுகளை, தெற்கிலுள்ள கிருஷ்ணா, துங்கபத்திரை ஆறு மற்றும் காவேரி ஆறுகளுடன் இணைப்பது.

கேரளத்தில் மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக அரபிக் கடலில் கலக்கும் கேரளா ஆறுகளை கிழக்குப் பகுதியில் உள்ள வறண்ட பகுதிகளுக்குத் திருப்பி விடுவது.

Remove ads

பயன்கள்

விவசாயத்தை நம்பி உள்ள இந்திய நாட்டில் நீர்ப்பாசனத்திற்கு பெரும்பான்மையான விவசாயிகள் பருவ மழையையே நம்பியுள்ளனர். பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் வறட்சி ஏற்பட்டு உணவு உற்பத்திப் பாதிக்கப்படுகிறது. அதே காலத்தில் மற்ற பகுதிகளில் அதிக அளவு மழை பொழிந்து ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உபரி நீர் வீணாக கடலில் சென்று கலக்கின்றது.

இப்படி வீணாகும் நீரை வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடுவதன் மூலம் பொதுமக்களுக்குக் குடிநீர் வசதியும், விவசாயத்திற்கான பாசன வசதியும் பெறமுடியும். நீர்வழிப் போக்குவரத்து அதிகரிக்கும். மீன் பிடி தொழில் பெருகும் 

திட்ட முன்னேற்றம்

தேசிய அளவிலான நதிநீர் இணைப்புத் திட்டத்தில் இன்னும் எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் எற்படவில்லை. ஆனால் மாநில அளவில் நதிகளை இணைப்பதற்கான முயற்சிகள் அந்தந்த மாநில அரசுகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குஜராத் அரசு தனது மாநிலத்தில் பாயும் ஆறுகளை இணைக்கும் முயற்சியை ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தடைக் கற்கள்

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள கால தாமதத்திற்காகச் சொல்லப்படும் காரணங்கள்:

  • இதற்குத் தேவையான மிகப் பெரிய செலவுத் தொகை
  • இமயமலை நதிகளை இணைப்பதை ஆட்சேபிக்கும் அந்நதிகளினால் பயன்பெறும் அண்டை நாடுகள்
  • சுற்றுச் சூழல் மற்றும் மக்களுக்கான பாதிப்பு
  • மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாமை

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads