தேசிய நூற்புச் சக்கர அருங்காட்சியகம்

இந்தியாவின் புதுடெல்லியின் கன்னாட்டு பிளேசில் உள்ள நூற்புச் சக்கர அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia

தேசிய நூற்புச் சக்கர அருங்காட்சியகம்map
Remove ads

தேசிய நூற்புச் சக்கர அருங்காட்சியகம் (National Charkha Museum) என்பது புது தில்லி, கன்னாட்டு பிளேசில் அமைந்துள்ள ஒரு நூற்புச் சக்கர அருங்காட்சியகம் ஆகும். பாலிகா பஜாரில் ஏற்கனவே கட்டப்பட்ட தோட்டத்தில் இது கட்டப்பட்டுள்ளது. புதுடெல்லி மாநகராட்சி மன்றமும் காதி வளர்ச்சி மற்றும் கிராம தொழில்கள் ஆணையமும் இணைந்து இதை கட்டியது.[2] இந்த அருங்காட்சியகம் மே 21, 2017 அன்று அப்போதைய பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் சாவால் திறக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

இந்த அருங்காட்சியகத்தில் 26 அடி (8 மீட்டர்) நீளமும் 13 அடி (4 மீட்டர்) உயர குரோமியம் துருவேறா எஃகிலான நூற்புச் சக்கரம் ஒன்று உள்ளது. இது ஐந்து டன் எடை கொண்டது. அதன் மீது வெப்பத்தின் தாக்கம் ஏற்படுவதில்லை. மேலும் இது துரு எதிர்ப்பு மற்றும் காந்தமற்றது. இந்த சக்கரம் உலகின் மிகப்பெரிய நூற்புச் சக்கரமாகும். இந்த அருங்காட்சியகம் நூற்பு சக்கரத்தின் வரலாறு மற்றும் பரிணாமத்தை, ஒரு தாழ்மையான கருவியிலிருந்து தேசியவாதத்தின் அடையாளமாக சித்தரிக்கிறது. இந்த கருவி அல்லது இயந்திரம் இந்திய குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தது, ஏனெனில் அவர்கள் இராட்டையைப் பயன்படுத்தி உள்நாட்டுத் (இந்தியாவில் தயாரிக்கப்பட்ட) துணிகளை நெசவு செய்யத் தொடங்கினர்.[3] இந்த அருங்காட்சியகத்தின் நுழைவு கட்டணம் ரூ .20.

Remove ads

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads