தேவதத்தன்

From Wikipedia, the free encyclopedia

தேவதத்தன்
Remove ads

தேவதத்தன் (Devadatta) (சமசுகிருதம் & பாளி: देवदत्त) சாக்கிய குல புத்தரின் நெருங்கிய உறவினரும், பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவராகவும் விளங்கியவர். சாக்கிய நாட்டு இளவரசன் தேவதத்தன், புத்தரின் தாய்மாமன் சுப்பதத்தா - அமிதா இணையருக்கு பிறந்தவர். தேவதத்தனின் மனைவி பெயர் அமிதா. தேவதத்தனின் உடன் பிறந்த சகோதரி பத்தகச்சானா என்ற யசோதரையை மணந்தவரே சித்தார்தன் ஆவார். புத்தரின் நேரடி சீடர்களில் தேவதத்தனும் ஒருவராவார். [1][2]

விரைவான உண்மைகள் தேவதத்தன், சுய தரவுகள் ...
விரைவான உண்மைகள் தேவதத்தன் மொழிபெயர்ப்புகள், சமசுகிருதம் ...

மகத நாட்டு பேரரசர் பிம்பிசாரரின் மகனும், பட்டத்து இளவரசனும் ஆன அஜாதசத்ரு தேவதத்தன் மீது மரியாதை வைத்திருந்தான். ஒரு முறை புத்தரிடம் சென்று, தனக்கு பௌத்த சங்கத்தின் தலைமை பதவி ஏற்பதற்கு வசதியாக, தன்னை புத்தரின் அடுத்த வாரிசாக அறிவிக்கக் கோரினான். தேவதத்தனின் கோரிக்கையை ஏற்க மறுத்த புத்தரைக் கொல்ல முற்பட்டு, ஒரு முறை புத்தர் வரும் பாதையில் மலையிலிருந்து பெரும் பாறைகளை உருட்டி விட்டான். ஆனால் புத்தரைக் கொல்லும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால் மனம் உடைந்த தேவத்தன் தான் பிறந்த சாக்கிய குல பிக்குகளை ஒன்று சேர்த்து, புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.[3]

Remove ads

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads