தேவிபட்டினம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கடற்கரை கிராமம் From Wikipedia, the free encyclopedia

தேவிபட்டினம்map
Remove ads

தேவிபட்டினம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4]

விரைவான உண்மைகள்

ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[5]

இராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தேவிபட்டினம் உள்ளது. தேவிபட்டினம் ஒரு சிறு துறைமுகமாக விளங்கியது; 1954ஆம் வருடம் இத்துறைமுகம் செயல்படுவது நின்றது.

Remove ads

இவ்வூரின் சிறப்பு

கடல் நடுவே அமைந்துள்ள நவபாஷாணம் எனப்படும் நவக்கிரகங்கள் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித யாத்திரைத் தலம் ஆகும். இங்கு இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நவ பாஷாணம் (9 கற்கள்) என்ற நவக் கிரகங்கள் உள்ளன. இவை கரையிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ளன. இந்தியாவிலேயே இங்குதான் கடலில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு கடலுக்கு அருகில் கடலடைத்த பெருமாள் கோவில் உள்ளது.[6]

தேவிபட்டினம் சக்திபீடம்

தேவிபட்டினம் உலகநாயகி அம்மன் கோவிலை சிலர் சக்தி பீடமென்பர். ஏனெனில் மேரு தந்திரத்தின்படி தேவிகோட்டம் என்பது தேவியின் இடது அக்குள் விழுந்த இடமாகும். மேலும் இதுவே சமஸ்கிருதத்தின் சகாரம் தோன்றிய இடமுமாகும். தேவிகோட்ட பீடத்தின் தேவியின் பெயர் அகிலேஸ்வரி என்று ப்ருஹன் நீல தந்திரம் கூறுகிறது. தமிழ்நாட்டின் தேவிபட்டினத்தில் உலகநாயகி என்ற அம்மன் கோவில் உண்டு. உலகம் என்பதும் அகிலம் என்பதும் ஒன்றேயென்பதால் இதுவே சக்தி பீடமாகும். அதுமட்டுமல்லாமல் இக்கோவிலில் உள்ள அம்பிகையின் சுயம்பு பல சக்தி பீடங்களில் உள்ள கரும்பாறை அமைப்பில் உள்ளது. ஆகவே பல்வேறு ஆதாரங்களின்படி இந்த இடமே தேவிகோட்டம் என்ற சக்தி பீடம் என்பர். இதை வீரசக்தி பீடம் என்றும் கூறுவர்.[7]

புராணம்

ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, இங்கு கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டபோது கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் என்றும், பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன என புராணங்கள் கூறுகின்றன.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

இவற்றையும் கான்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads