சௌத்ரி தேவிலால் (Chaudhary Devi Lal) (பிறப்பு: 25 செப்டம்பர் 1915 – இறப்பு: 6 ஏப்பிரல் 2001) சாட் சமூகத்தை சார்ந்த இந்திய அரசியல்வாதி. அரியானா மாநில முதல்வராக 1977-1979 மற்றும் 1987-1989 ஆகிய காலகட்டத்தில் இரு முறை பணியாற்றியவர். மேலும் வி. பி. சிங் மற்றும் சந்திரசேகர் பிரதமர்களாக இருந்தபோது, இந்திய அரசின் துணைப் பிரதமராக 1989-1991ஆம் ஆண்டு முடிய செயல்பட்டவர்.[1]
அரசியல்
1958 இல் அரியானாவைப் பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிரித்து புதிய மாநிலத்தைத் தோற்றுவிக்க முக்கியப் பங்கு வகித்தவர்.
1971 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 1974இல் சிர்சா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்தில், மிசா சட்டத்தில் கைதாகி 19 மாதங்கள் சிறையில் இருந்தவர்.
1977இல் ஜனதா கட்சியில் இணைந்து, அரியானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மாநில முதல்வர் ஆனார்.
1987இல் லோக் தளம் எனும் மாநில கட்சியைத் தோற்றுவித்து, அரியானாவின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 85 தொகுதிகளில் இவரது லோக் தள கூட்டணி வெற்றி பெற்று இரண்டாம் முறையாக அரியானா மாநில முதல்வர் ஆனார்.
1989இல் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் சிகார் மற்றும் ரோத்தக் நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றார். அந்த தேர்தலில் ராஜிவ் காந்திக்கு மாற்றாக காங்கிரசுக்கு எதிர் அணியினர் வி. பி. சிங்கையே தூய்மையான மாற்று பிரதம வேட்பாளராக முன்னிருத்தி இருந்த போதிலும் டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளமன்றத்தின் நடு அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஆனால் அரியானாவின் ஜாட் தலைவரான இவர் பிரதமர் பதவியை ஏற்கனவே முயற்சி செய்து தோல்வி அடைந்தால் மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஆனால் ஜனதா தளத்தின் கட்சிக்குள்ளயே வி.பி.சிங்கின் பிரதமர் பதவிக்கு போட்டியாளராக விளங்கிய தேவிலாலின் நெருங்கிய நண்பரான சந்திரசேகர்க்கு பிரதமர் பதவியை தர மறுத்ததை பல கட்சியினருக்கு நடுவே ஆச்சரியத்ததை ஏற்படுத்தியது. அவர் காங்கிரசில் பல பதவிகளில் நேர்மையாக செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியின் அரசின் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து எதிர்த்த அமைச்சர் வி. பி. சிங்கை பிரதமருக்கான தகுதியுடைய வேட்பாளராக அறிவித்துவிட்டு நாடாளமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறிய தேவி லால் அமைச்சரவையில் துணை பிரதமராக பங்கு பெற்றார். இவரது மகன் ஓம்பிரகாஷ் சௌதாலா அரியானா மாநில முதல்வராக இருந்த போது, 1998இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார்.[2].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.