ஓம்பிரகாஷ் சௌதாலா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ஓம்பிரகாஷ் சௌதாலா
Remove ads

ஓம்பிரகாஷ் சௌதாலா (Om Prakash Chautala, 1 சனவரி 1935 – 20 திசம்பர் 2024)[3] இந்தியாவின் அரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். ஓம்பிரகாஷ் சௌதாலா அரியானா மாநில முதல்வராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

விரைவான உண்மைகள் ஓம்பிரகாசு சௌதாலாOm Prakash Chautala, அரியானா முதலமைச்சர் ...

ஓம்பிரகாஷ் சௌதாலா, இந்திய அரசின் முன்னாள் துணைப் பிரதமரும், அரியானா மாநில முன்னாள் முதல்வருமான தேவிலாலின் மகன்.[4][5].[6][7].

அஜய்சிங் மற்றும் அபய்சிங் ஆகியோர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் மகன்கள். பேரன்களில், துஷ்யந்த்சிங் சௌதாலா 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். திக்விஜய் சௌதாலா என்ற பேரன், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். கரன் சௌதாலா மற்றும் அர்ஜூன் சௌதாலா ஆகிய பேரன்களில் அரியானா அரசியல் களத்தில் உள்ளனர்.[8][9][10][11][12][13]

ஓம்பிரகாஷ் சௌதாலா, ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் பத்தாண்டு சிறை தண்டனை பெற்றார். [14].[15] .[16][17] தில்லி சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து, 11 சூலை 2014இல் ஓம்பிரகாஷ் சௌதாலா, தில்லி உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தற்போது விசாரணையில் உள்ளது.[18]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads