தைட்டானியம்(II) குளோரைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தைட்டானியம் குளோரைடு (Titanium(II) chloride) TiCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் அதிக வினைத்திறம் கொண்டது அகும் [1]. இதனால் இச்சேர்மம் மிகச்சிறிய அளவிலேயே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. Ti(II) ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். ஆக்சிசனுடன் அதிக நாட்டம் கொண்டிருப்பதால் தண்ணீருடன் வினைபுரிகையில் மீளா வினையாக ஐதரசனை உற்பத்தி செய்கிறது. வழக்கமான தயாரிப்பு முறை என்பது 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் TiCl3 சேர்மத்தை விகிதச்சமமற்ற விகிதச் சிதைவுக்கு உட்படுத்தும் முறையாகும். ஆவியாகக் கூடிய TiCl4 இன் இழப்பால் இவ்வினை இயக்கப்படுகிறது
- 2 TiCl3 → TiCl2 + TiCl4
இவ்வினை வனேடியம்(III) குளோரைடை வனேடியம்(II) குளோரைடாகவும் வனேடியம் நாற்குளோரைடாகவும் மாற்றுகின்ற முறையைப் போன்ற வினையாகும் CdI2 கட்டமைப்பு அடுக்காலானதைப் போன்ற அமைப்பில் தைட்டானியம் குளோரைடு படிகமாகிறது. இதன்படி Ti(II) மையங்கள் ஆறு குளோரைடு ஈந்தணைவிகளுடன் எண்முக ஒருங்கமைவைக் கொண்டுள்ளன.
Remove ads
வழிப்பொருட்கள்
TiCl2(chel)2, போன்ற மூலக்கூற்று அணைவுச் சேர்மங்கள் அறியப்படுகின்றன. இங்குள்ள chel என்பது 1,2-பிசு(டைமெத்தில்பாசுபினோ)யெத்தேன், ((CH3)2PCH2CH2P(CH3)2) மற்றும் டெட்ராமெத்தில்யெத்திலீன்டையமீன் ((CH3)2NCH2CH2N(CH3)2) போன்றவற்றைக் குறிக்கும் [2]. இத்தகைய இனங்களை தொடர்புடைய Ti(III) மற்றும் Ti(IV) அணைவுகளை ஒடுக்குவதன் மூலம் தயாரிக்கலாம். . TiCl2[(CH3)2PCH2CH2P(CH3)2]2 சேர்மம் மும்மைச் சுழற்சி நிலையுடன் கூடிய பாரா காந்தத் தன்மையும் Ti(CH3)2[(CH3)2PCH2CH2P(CH3)2]2 iசேர்மம் டையா காந்தத் தன்மையும் கொண்டுள்ளன [3]. இவ்வினங்களில் வழக்கத்திற்கு மாறான மின்னியல் விளைவுகள் அறியப்படுகின்றன.
Na2TiCI4 சேர்மம் தைட்டானியம் குளோரைடின் திண்மநிலை வழிப்பொருளாகும். தைட்டானியம் உலோகத்துடன் சோடியம் குளோரைடு பாய்மத்திலுள்ள தைட்டானியம் முக்குளோரைடுடன் வினைபுரியச் செய்து இதைத் தயாரிக்கிறார்கள் [4]. இவ்வினங்கள் நேரியல் சங்கிலி கட்டமைப்பை ஏற்கின்றன. இங்கு மீண்டும் Ti(II) மையங்கள் விளிம்பிலுள்ள ஊடச்சு ஆலைடுகளுடன் எண்முக வடிவிலுள்ளன [5].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads