வனேடியம் நாற்குளோரைடு

From Wikipedia, the free encyclopedia

வனேடியம் நாற்குளோரைடு
Remove ads

வனேடியம் நாற்குளோரைடு (Vanadium tetrachloride) என்பது VCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் சிவப்பு நிறத்தில் உள்ள இத்திரவம் மற்ற வனேடியம் சேர்மங்களைத் தயாரிப்பதற்கு உதவும் ஒரு பயனுள்ள வினைப்பொருளாக உள்ளது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு மற்றும் பண்புகள்

எதிர்காந்தத் தன்மையுள்ள TiCl4 சேர்மத்தைவிட கூடுதலாக ஒரு இணைதிறன் எலக்ட்ரானைப் பெற்று இணைக்காந்த பண்பு கொண்ட திரவமாக வனேடியம் நாற்குளோரைடு உள்ளது. அறை வெப்பநிலையில் இணைக்காந்தப் பண்பு கொண்டுள்ள மிகச்சில சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.

வனேடியம் உலோகத்தை குளோரினேற்றம் செய்து வனேடியம் நாற்குளோரைடு தயாரிக்க முடியும். இவ்வினையில் VCl5 உருவாவதில்லை. ஆக்சிசனேற்றும் திறன் பற்றாக்குறை காரணமாக குளோரினால் வனேடியம் நாற்குளோரைடை தாக்க முடிவதில்லை.

மாறாக NbCl5 மற்றும் TaCl5 போன்ற கனமான இதனையொத்த சேர்மங்கள் நிலைப்புத் தன்மையுடனும் குறிப்பாக ஆக்சிசனேற்றப் பண்பு இல்லாமலும் இருக்கின்றன. இயல்பாக உள்ள VF5 சேர்மத்தில் குளோரினுடன் ஒப்பிடுகையில் புளோரினின் ஆக்சிசனேற்றும் பண்பு மிகுந்துள்ளது. சாதாராண அழுத்தத்தில், வனேடியம் நாற்குளோரைடானது அதன் கொதிநிலையில் குளோரினை வெளியேற்றி வனேடியம்(III) குளோரைடைத் தருகிறது என்பதை இதனுடைய ஆக்சிசனேற்றத் திறன் குறிப்பாகத் தெரிவிக்கிறது.

Remove ads

வினைகள்

இதனுடைய உயர் ஆக்சிசனேற்றத் திறனுக்கு இசைவாக இது 50 ° செ வெப்பநிலையில் ஐதரசன் புரோமைடுடன் வினைபுரிந்து வனேடியம் முப்புரோமைடை உருவாக்குகிறது. இவ்வினை VBr
4 உருவாதல் வழியாக நிகழ்கிறது. அறை வெப்பநிலைக்கு சூடாக்கும் போது VBr4 புரோமினை வெளியேற்றுகிறது.[1]

2 VCl4 + 8 HBr → 2 VBr3 + 8 HCl + Br2

VCl4பல வழங்கு ஈனிகளுடன் வினைபுரிந்து கூட்டு விளை பொருட்களைத் தருகிறது. உதாரணம்: VCl4(THF)2. வனேடோசீன் இருகுளோரைடு தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகவும் இது இருக்கிறது.

Remove ads

பயன்கள்

ஆல்க்கீன்களின் பல்லுறுப்பியாக்கும் வினையில், குறிப்பாக இரப்பர் தொழிலில் வனேடியம் நாற்குளோரைடு வினையூக்கியாகச் செயல்படுகிறது. வனேடியம் ஆல்க்கைல்களின் இடைநிலைப்பட்ட பண்புடன் நிகழும் சீக்ளர்- நட்டா வினையூக்கியுடன் இவ்வினை தொடர்புடையது ஆகும்

கரிம வேதியியல்

கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் வனேடியம் நாற்குளோரைடு இணைப்பு பீனால்களாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, இது பீனாலை 4,4'- இருபீனாலாக மாற்றுகிறது[2]. இப்பீனால் மூன்று படிநிலைகளில் VCl3 ஆகக் ஒடுக்கப்படுகிறது.

2 C6H5OH + 2 VCl4 → HOC6H4–C6H4OH + 2 VCl3 + 2 HCl

இவ்வினை VCl4, இன் ஆக்சிசனேற்றும் திறனை உயர்த்திக் காட்டுகிறது.

பதுகாப்பு நடவடிக்கை

VCl4 துரிதமாக ஆவியாகும். தீவிரமான ஆக்சிகரணியாக இருப்பதால் உடனடியாக நீராற்பகுக்கப்பட்டு ஐதரசன் குளோரடை வெளிவிடுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads