தைநீராடல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தைநீராடல் சங்ககால நீர் விளையாட்டுகளில் ஒன்று. தை மாதம் [1] தமிழ்நாட்டுப் பருவகாலத்தில் முன்பனிக்காலம். [2] இக்காலத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும். சங்ககால மகளிர் இந்த வெதுவெதுப்பில் நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள் தைநீராடல் எனக் குறிப்பிடுகின்றன.

சங்க இலக்கியங்களில் தைந்நீராடல்
தை நீர் தண்மை உடையது எனப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் ‘தண்மை’ பனி போன்ற குளுமையை உணர்த்தாது. தழுவும் தலைவனுக்குத் தலைவியின் உடல் குதுகுதுப்பாய் இருப்பது போன்ற ‘தண்மை’ [3]
பாரியின் பறம்பு மலையில் இருந்த சுனைநீரின் பனிக்கால இன்பம் பெரிதும் போற்றப்பட்டது.[4]
- மகளிர் தன் விளையாட்டுத் தோழிமாருடன் தை மாதத்தில் குளத்துக்குச் சென்று நீராடுவர்.[5]
- ஐந்து வகையான பூ மணங்களை ஒவ்வொன்றாக அடுத்தடுத்துக் கூந்தலில் பூசிக்கொண்டு நீராடுவர்.[6]
- தவக்கோலம் பூண்டு நீராடுதல் உண்டு.[7]
- பொய்தல் விளையாடும் தோழியரை வீடுவீடாகச் சென்று பாட்டுப்பாடி அழைத்துக்கொண்டு சென்று நீராடுவர். நீராடிப் பெற்ற பயனைப் பலர்க்கும் பகிர்ந்தளிப்பர்.[8]
- சிறுமுத்தன் வழிபாடு நிகழும்.[9]
Remove ads
மார்கழி நீராடல்
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் இயற்றிய திருப்பாவை என்னும் வைணவ நூலும், மாணிக்க வாசகர் இயற்றிய திருவெம்பாவை என்னும் சைவ நூலும் மார்கழி நீராடல் பற்றிக் குறிப்பிடுகிறார்.
- திருப்பாவையில் கோவிந்தன் பறை தரவேண்டும் என வேண்டி மகளிர் நீராடி வழிபடுகின்றனர். சங்ககாலத்துத் தைந்நீராடல் சிறுமுத்தனைப் பேணி நடைபெறுகிறது. முத்தாலம்மன் தெய்வ வழிபாடு இக்காலத்தில் உண்டு. முத்தாலம்மன் பெண்தெய்வம். சிறுமுத்தன் ஆண்தெய்வம்.
- வீடு வாடாகச் சென்று தோழிமாரை அழைத்துக்கொண்டு செல்லுதல் தைந்நீராடல், மார்கழி நீராடல் ஆகிய இருவகை விளையாட்டுகளிலும் காணப்படுகின்றன. *தைந்நீராடலில் காணப்படும் பொய்தல் விளையாட்டு மார்கழி நீராடலில் காணப்படவில்லை.
- தைந்நீராடலில் சிறுசோறு ஆக்கி விளையாடுகின்றனர். சிறுசோறு என்பது விளையாட்டுச் சோறு. சிறு என்னும் சொல் விளையாட்டை உணர்த்தும். [10] மார்கழிநீர் ஆடும் மகளிர் நெய்ப்பொங்கல் சமைத்து உண்டு மகிழ்கின்றனர்.
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads